பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை பாஜக- காங்கிரஸின் கூட்டுச் சதி!
30 May 2026, 9:01 pm

பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை பாஜக- காங்கிரஸின் கூட்டுச் சதி!

அகர்தலா கேரள முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநில எதிர்க்கட்சித் தலைவரு மான பினராயி விஜயனின் இல்லத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளைக் கண்டித்து வியாழனன்று திரிபுரா முழுவதும் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாஜக தலைமையிலான ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக செங்கொடிகளை ஏந்தி,”அமலாக்கத் துறை சோதனை உள்ளிட்ட சதித்திட்டத் தாக்கு தல்கள் இடதுசாரி இயக்கத்தை பலவீனப் படுத்தாது” என்று முழக்கங்களை எழுப்பினர்.

பாஜக - காங்கிரஸ் சதி அகர்தலாவில் மேற்கு திரிபுரா மாவட்டக் குழு ஏற்பாடு செய்திருந்த போராட்டப் பேரணி யில் முன்னாள் முதலமைச்சரும், சிபிஎம் மூத்த தலைவருமான மாணிக் சர்க்கார், மத்தியக் குழு உறுப்பினர் மாணிக் டே, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ரமா தாஸ், ரத்தன் தாஸ், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பவித்ரா கர் உள்ளிட்ட பல தலை வர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெருமள விலான பொதுமக்கள் என நூற்றுக்கணக்கா னோர் பங்கேற்றனர்.

சிபிஎம் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இப்பேரணி, நகரின் முக்கி யப் பகுதிகள் வழியாகச் சென்று சகுந்தலா சாலையில் கண்டன பொதுக் கூட்டமாக நிறை வடைந்தது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார், “திருவனந்தபுரத்தில் உள்ள பினராயி விஜய னின் வாடகை இல்லத்திலும், கண்ணூரில் உள்ள அவரது பூர்வீக வீட்டிலும் புதன்கிழமை அமலாக்கத்துறை சோதனையை நடத்தியது.

அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

பாஜக மற்றும் கேரளத்தில் உள்ள காங்கிரஸ் தலைமை யிலான அரசாங்கத்தால் கூட்டாகத் திட்டமிடப் பட்ட அரசியல் உள்நோக்கம் கொண்ட சதியே இந்த அமலாக்கத்துறை சோதனை ஆகும்.

ஆவணம் கிடைக்கவில்லை பிரதமருக்கும் கேரளத்தின் புதிய காங்கிரஸ் முதலமைச்சருக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து உடனடியாக இந்த சோதனை அரங்கேறியுள்ளது.

மேலும், இந்தச் சோதனையின் போது ஒரு முன்னாள் முதலமைச்சருக்கு வழங்கப்பட வேண்டிய நெறி முறைகள் கூட திட்டமிட்டே மீறப்பட்டுள்ளது.

3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சோதனையின் போது அமலாக்கத்துறை யால் சட்டவிரோதமான எதையும் கைப்பற்ற முடியவில்லை.

இது தொடர்பான எழுத்துப் பூர்வமான அங்கீகாரத்தையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

இடது சாரிகளின் பிம்பத்தைக் கெடுப்பதும், ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள் குறித்து மக்களி டையே குழப்பத்தை ஏற்படுத்துவதுமே இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கம் ஆகும்.

பாஜகவும், காங்கிரஸும் அதிகாரத்திற் காகத் தேர்தல்களில் மோதிக்கொள்ளலாம்.

ஆனால் இரு கட்சிகளுமே ஏகபோக முதலாளி கள், பதுக்குபவர்கள், கந்துவட்டிக்காரர்கள் மற்றும் சுரண்டும் வர்க்கத்தினரின் நலன்க ளையே பிரதிபலிக்கின்றன. சிபிஎம் கட்சியின் ஆட்சி தொடர்பான வலிமை அவ்வப்போது மாறினாலும், மக்கள் சார்பான மாற்று அர சியல் பார்வையைப் பிரதிபலிக்கும் முதன்மைச் சக்தியாக சிபிஎம் விளங்கி வருகிறது.

முட்டாள்களின் சொர்க்கத்தில்... நாடாளுமன்ற, சட்டமன்ற பலத்தைப் பொருட்படுத்தாமல் தொழிலாளர்கள், விவசா யிகள், நடுத்தர வர்க்கத்தினர், பழங்குடியினர், தலித்துகள், பெண்கள் மற்றும் பிற ஒடுக்கப் பட்ட பிரிவினருக்காக இடதுசாரி சக்திகள் தொ டர்ந்து போராடி வருகின்றன.

அதனால்தான் கம்யூனிஸ்டுகளை குறிவைத்து, அவர்கள் மீது அவதூறு பரப்ப முயற்சிகள் மேற்கொள் ளப்படுகின்றன.

அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற மத்திய முகமைகளைத் தவறாகப் பயன் படுத்தி, சர்வாதிகார மற்றும் நவதாராளவாத பாசிச சக்திகள் ஜனநாயகக் குரல்களை ஒடுக்க முயல்கின்றனர்.

குறிப்பாக நாட்டில் பண பலம், மிரட்டல் மற்றும் நிர்வாக முறை கேடுகள் மூலம் தேர்தல்களும் கேலிக்கூத்தாக மாற்றப்படுகின்றன.

பொய் வழக்குகள், மிரட்டல்கள் மூலம் கம்யூனிஸ்டுகளை ஒடுக்கிவிடலாம் என்று நம்புபவர்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறார்கள்.

இடதுசாரிகள் அன்றும் இருந்தார்கள், இன்றும் இருக்கிறார்கள், நாளை யும் போராட்டக் களத்தில் தொடர்ந்து இருப் பார்கள்.

இதற்குச் சில காலம் எடுக்கலாம், ஆனால் வெற்றி நிச்சயம்” என உரக்கக் கூறினார்.

தொடர்ந்து சிபிஎம் மேற்கு திரிபுரா மாவட்டச் செயலாளர் ரத்தன் தாஸ் பேசுகை யில்,“ஏகபோக முதலாளித்துவ நலன்களுக்குச் சேவை செய்யும் கட்சிகளின் தலைவர்களைப் போலல்லாமல், நாட்டின் கம்யூனிஸ்ட் தலை வர்கள் பொது வாழ்வில் நேர்மைக்கும் அர்ப்ப ணிப்புக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள். பினராயி விஜயனுக்கு எதிரான அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிம்பத்தைக் குலைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது” என அவர் குற்றம் சாட்டினார்.