தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமலாக்கத்துறை வழக்குகளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே தண்டனையா? ஒன்றிய அரசுக்கு டாக்டர்

yesterday
அமலாக்கத்துறை வழக்குகளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே தண்டனையா? ஒன்றிய அரசுக்கு டாக்டர்

அமலாக்கத்துறை வழக்குகளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே தண்டனையா? ஒன்றிய அரசுக்கு டாக்டர் வி.சிவதாசன் எம்.பி. கேள்விஒன்றிய அரசின் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை பதிவு செய்யும் வழக்குகளில் பெரும்பான்மையானவை விசாரணையிலேயே தேங்குவதாகவும், மிகக் குறைவானவர் களுக்கே நீதிமன்றங்கள் மூலம்தண்டனை உறுதி செய்யப்படுவதாகவும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வி.சிவதாசன் எம்.பி. சுட்டிக்காட்டி யுள்ளார்.

வெறும் 1% க்கும் குறைவு

இதுதொடர்பான சிவதாசனின் நாடாளுமன்றத்தில் இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி அளித்த பதிலின்படி, 202122 முதல் 2025-26 வரை பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் அமலாக்கப் பிரிவு 4,622 வழக்குகளைப் பதிவு செய்து 1,243 பேரை கைது செய்துள்ளது. ஆனால், வெறும் 43 வழக்குகளில் மட்டுமே (1சதவீதத்திற்கும் குறைவு) தீர்ப்பு வழங்கப்பட்டு 104 நபர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். வருமானவரித்துறையிலும் 2,127 வழக்குகளில் 233 பேருக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது.அரசியல் நோக்கத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தப்படும் அமைப்புகள்கைதுகளின் எண்ணிக்கையைக் காட்டி பெருமை பேசும் அரசு, எத்தனை வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன, எத்தனை பேர் பல ஆண்டுகளாக விசாரணைக் கைதிகளாகச் சிறையில் வாடுகிறார்கள் என்ற உண்மையை வெளியிட மறுக்கிறது. அரசியல் எதிரிகளைஒடுக்க மத்திய விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படு வதை தடுத்து, வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவர வேண்டும் என்று அவர்வலியுறுத்தியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.