ஆம் ஆத்மி கட்சியை ஒடுக்க பாஜக தீவிரம் கோவா மாநில தலைவரையும் கைது செய்த அமலாக்கத்துறை
18 May 2026, 9:17 pm

ஆம் ஆத்மி கட்சியை ஒடுக்க பாஜக தீவிரம் கோவா மாநில தலைவரையும் கைது செய்த அமலாக்கத்துறை

புதுதில்லி கோவா மாநிலத்தின் ஆம் ஆத்மி தலைவராக இருப்பவர் தீபக் சிங்லா.

இவர் மீது வங்கி பணமோசடி குற்றச்சாட்டு இருப்பதாக அமலாக்கத்துறை சமீபத்தில் வழக்குப் பதிவு செய் தது. தொடர்ந்து திங்களன்று அதிகாலை தில்லி, கோவாவில் தீபக் சிங்லாவுக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை பல மணி நேரம் சோதனை நடத்தி யது. வடக்கு கோவா பகுதியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் அலு வலகத்திலும் இந்த சோதனை விரி வடைந்தது.

இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை எவ்வித அறிக்கையும் வெளியிட வில்லை. ஆனால் திங்களன்று மதியம் தீபக் சிங்லாவை கைது செய்ததை அமலாக்கத்துறை அறி வித்தது.

அதே போல ஆம் ஆத்மி கட்சியின் வடக்கு கோவாவின் முக்கிய நிர்வாகிகளும் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதிஷி கடும் கண்டனம் தீபக் சிங்லாவின் கைதுக்கு தில்லியின் முன்னாள் முதலமைச்ச ரும், ஆம் ஆத்மி கட்சியின் கோவா மாநிலப் பொறுப்பாளருமான அதிஷி கடும் கண்டனம் தெரி வித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் கூறுகையில்,”கோவாவில் ஆம் ஆத்மி கட்சியின் செல்வாக்கு அதிகரித்து வருவதால், பாஜகவின் விசுவாசமான காலாட்படையான அமலாக்கத்துறை இங்கும் அனுப் பப்பட்டுள்ளது.

திங்களன்று அதி காலை முதல், ஆம் ஆத்மி கட்சியின் கோவா மாநில இணைப் பொறுப்பா ளர் தீபக் சிங்லாவின் குடியிருப்பு, கோவாவில் உள்ள சில கட்சியின ரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது இது எங்கள் கட்சியினரை பய முறுத்துவதற்கான முயற்சி மட்டு மல்ல, பாஜகவிற்காக எங்கள் கட்சியின் கட்டமைப்பு சார்ந்த ஒட்டு மொத்தத் தரவுகளையும் திரட்டு வதற்கான முயற்சியாகும்” என்று அவர் கூறினார்.

தரவுகளை திருடும் படையாகவும் மாறிய அமலாக்கத்துறை

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சி யை கவிழ்க்க, எதிர்க்கட்சிகளை மிரட்ட பாஜக பல்வேறு சித்து விளையாட்டை அரங்கேற்றுவது வழக்கம். இதில் முதன்மையானது அமலாக்கத்துறை சோதனை மூலம் போலி பிரச்சாரம், தகவல் திருட்டு தான்.

எடுத்துக்காட்டாக, ஒரு மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்கும் முன், ஆட்சியில் இருக்கும் கட்சியின் முக்கிய தலைவர்களை தங்கள் பக்கம் பாஜக வளைக்கும்.

பாஜகவிற்கு தாவியவர்கள் மூலமாக ஆளுங்கட்சித் தலைவர்களின் மீதான வழக்குகளை அறிந்து அமலாக்கத்துறை மூலம் சோதனை நடத் தும். இந்த சோதனை மூலம் ஆளுங்கட்சித் தலை வர்கள் ஊழல்வாதிகள் என “கோடி மீடியா” மூலம் பாஜக பிரச்சாரம் மேற்கொள்ளும்.

தொடர்ந்து அமலாக்கத்துறை சோதனை நடத் தும். இந்த சோதனையின் போது கட்சி அலுவலகத்திற் கே நேரடியாக சென்று அமலாக்கத்துறை தரவுக ளை கைப்பற்றும்.

தரவுகள் கிடைக்காவிட்டால் அம லாக்கத்துறை சோதனை தொடரும். தரவுகள் கிடைத்துவிட்டால் சோதனை செய்யப்பட்டவர்களை கைது செய்யும்.

அதன்பிறகு தரவுகளை வாங்கி, கட்சியினரை வளைத்து “ஆப்ரேசன் லோட்டஸ்” மூலம் ஆட்சியை பாஜக கவிழ்க்கும். மேலும் இதே பாணியில் நாடு முழுவதும் எதிர்கட்சித் தலைவர்க ளையும் அமலாக்கத்துறை மிரட்டுகிறது.

இது தான் அமலாக்கத்துறையின் சோதனை ரகசியம். மேற்கு வங்கத்தில் ஐ பேக் நிறுவனத்தில் அமலாக் கத்துறை சோதனை நடத்தியது. தற்போது கோவா வில் ஆம் ஆத்மி அலுவலகத்தில் நேரடியாக நுழைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.