தீக்கதிர் உலக செய்திகள்
18 Oct 2026, 9:59 pm

ஈக்குவடாரில் இளைஞர்கள் போராட்டம்!

தென் அமெரிக்காவின் வடமேற்கில் உள்ள ஈக்குவடாரில் அரசுக்கும் மக்களுக்கும் இடையே முரண்பாடு தீவிரமடைந்துள்ளது. அக்டோபர் 10 அன்று ஆயிரக்கணக்கான மக்கள் வலதுசாரி ஜனாதிபதி டேனியல் நோபோ அரசிற்கு எதிராகத் தெருக்களில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். முறை சார்ந்த எதிர்ப்பின் தன்னாட்சி முன்னணி இப்போராட்டங்களை முன்னெடுத்தது.

பாதுகாப்பு, எரிசக்தி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புத் துறைகளில் நெருக்கடியை ஏற்படுத்திய அரசுக்கு எதிராக, அக்டோபர் 8 அன்று தலைநகரம் குயிட்டோவில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தின. கல்விக்கும் சுகாதாரத்திற்கும் அரசு நிதி ஒதுக்கீட்டைக் குறைத்ததை எதிர்த்தும், தொழிலாளர்களை அவமரியாதையாக நடத்துவதை எதிர்த்தும் குரல் எழுப்பப்பட்டன.

அக்டோபர் 10 ஆர்ப்பாட்டத்தில் உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பெருமளவில் பங்கேற்று, “மக்கள் நிம்மதியாக வாழ முடியாமல், அரசும் நிம்மதியாக இருக்க முடியாது; நோபோ அரசே வெளியேறு” என முழக்கமிட்டனர். கத்தோலிகப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத் தலைவர் பேசுகையில், இரு ஆண்டுகளுக்கு முன்பு மின்வெட்டு இருக்காது என வழங்கப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டுள்ளதாகவும், 60% மட்டுமே மருந்துகள் சப்ளை செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். சுகாதார நெருக்கடியைப் பயன்படுத்தித் தனியார் துறை செழித்து வளரும் நிலையில், காவல் துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அடக்குமுறையைஏவியுள்ளனர்.நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், நவீன தாராளமய கொள்கைகளைப் பின்பற்றும் நோபோ அரசு கடுமையானபின்னடைவுகளைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி முற்றுகிறது!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் உள்ள நிலையில், அவரது பிடிஐ (PTI) கட்சி ஆளும்கட்சியாக உள்ள கைபர் பக்டூன்க்வா மாநில அரசை ஷாபாஸ் ஷெரீப்பின் மத்திய அரசு அக்டோபர் 12 அன்று கலைத்தது. மையப்படுத்தப்பட்ட ஆளுநர் ஆட்சி திணிக்கப்பட்டுள்ளதுடன், மாகாணத்திலுள்ள 40 மாவட்டங்களில் 12 மாவட்டங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு அடிப்படை உரிமைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 4 அன்று இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி இஸ்லாமாபாத்தில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றது. மாநிலக் கல்வி நிலையங்கள் மூடப்பட்டதும், பெஷாவர் செல்லும் வழித்தடங்கள் முடக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மாநில முதலமைச்சர் மற்றும் பிடிஐ கட்சி எம்எல்ஏக்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இடதுசாரி கட்சியான ஹகூக்-இ-கல்க் கட்சி (HKP) மற்றும் மஸ்தூர் கிசான் கட்சி (MKP) உள்ளிட்ட

பல்வேறு அமைப்புகள் மத்திய அரசின் எதேச்சாதிகாரத்தைக் கண்டித்துள்ளன.

டிரம்ப்பின் ராணுவ பட்ஜெட்டை முறியடிக்க மக்கள் எழுச்சி தேவை!

ஈரானைத் தாக்கி வரும் அமெரிக்க யுத்த நடவடிக்கைகளால் சராசரி அமெரிக்க குடும்பம் 2,000 டாலர் செலவை ஏற்க வேண்டி யுள்ளது. அமெரிக்காவின் பென்டகன் 1.5 லட்சம் கோடி டாலர் ராணுவ பட்ஜெட்டைத் தயாரித்துள்ளது. பகாசூரகம்பெனிகள் ராணுவச் செலவுகளால் பெருமளவு ஆதாயம் அடையும் நிலையில், போலீசுக்கு ராணுவப்

பயிற்சி அளிக்கப்படுகிறது. பாலஸ்தீன ஆதரவு இய க்கங்கள் மற்றும் யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன.நவம்பரில் அமெரிக்காவில் நடைபெறும் இடைக்காலத் தேர்தல்களில் வரி செலுத்தும் மக்கள் எழுச்சி பெற வேண்டும் என ‘CODE PINK’ அமைப்பு அறைகூவி அழைப்பு விடுத்துள்ளது.

சவுதி அரேபியா - ஹௌத்தீஸ் மோதல்கள்!

ஏமனை தாக்குவதற்கு சவுதி அரேபியாவிற்கு உதவி செய்வது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. இதனிடையே, சவுதி அரேபியாவிற்கும் ஏமனின் ஹௌத்திகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த உதவ ஈரான் முன்வந்துள்ளது.ஏமனின் ஹௌத்தீஸ் அரசுக்கு எதிராக ஜூலையில் சானா சர்வதேச விமான நிலையத்தை சவுதி அரேபியா தாக்கியது. செங்கடல் பிரதேசத்தில் ஹௌத்திகள் புதிய பிரதேசங்களைக் கைப்பற்றுவதை சவுதி ஆதரவு படைகள் தடுத்தன. கடந்த 10 ஆண்டுகளாக சவுதி ஆதரவு அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏமனின் மூன்றாவது பெரிய மாநகரமான தைஸ்-ஐ ஹௌத்திகள் சுற்றி வளைத்துத் தரைவழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். சவுதியின் தற்காலிக தலைநகரான ஏடனுக்கும் தைஸ் நகருக்கும் இடையேயான சப்ளை தடம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், சவுதி யுத்த விமானங்கள் ஏமன் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளன.