தீக்கதிர் உலக செய்திகள்
8 Oct 2026, 10:39 pm

‘போல்சனாரோவுக்கு இனி இடமில்லை’

பிரேசிலில் போராட்டம் பிரேசிலில் ஜனாதிபதி வேட்பாளர் ஃபிளாவியோ போல்சனாரோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. அந்நாட்டு ஜனாதிபதி தேர்தலின் முதல்கட்ட வாக்கெடுப்பில், தீவிர வலதுசாரி முன்னாள் ஜனாதிபதியான ஜெய்ர் போல்சனாரோவின் மகன் ஃபிளாவியோ போல்சனாரோ முதலிடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, “போல்சனாரோவுக்கு இனி இடமில்லை;தந்தைக்கும் வேண்டாம்,மகனுக்கும் வேண்டாம்” போன்ற முழக்கங்கள் அடங்கிய பதாகைகள் பிடித்துக்கொண்டு, இளைஞர்கள் முதல்பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி சென்றனர்.

‘எல் நினோ’ தாக்கம்

டிசம்பர் மாதம் தீவிரமடையும் ‘எல் நினோ’ வானிலை நிகழ்வு வரும் டிசம்பர் மாதத்

திற்குள் மேலும் தீவிரமடையும். 1950-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக பெரிய காலநிலை மாற்றங்களில் ஒன்றாக இது உருவெடுக்கும் என ஐ.நா அவைபகிரங்கமாகஎச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா உலக வானிலை மையம்வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகின் பெரும்பாலான நாடுகளில் வழக்கத்தை விடமிகக் கடுமையான வெப்பநிலை நிலவும். மழைப்பொழிவில் மாற்றங்கள் ஏற்படுவதால், சில பகுதிகளில் கடுமையான வறட்சியும், மற்ற பகுதிகளில் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கும் ஏற்படும். இந்த வானிலை மாற்றம் உலகின் பல்வேறு நாடுகளின் விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும்ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் நேரடியாகப் பாதிக்கும் என எச்சரித்துள்ளது.

ஈக்வடாரில் பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் வலதுசாரி அரசு

க்யுட்டோ,அக்.8- தென்னமெரிக்க நாடான ஈக்வடாரில், தற்போதைய வலதுசாரி ஜானாதிபதி டேனியல் நோபோவா பத்திரிகை சுதந்திரத்தை கடுமையாக நசுக்கி வருகிறார். அரசின் தொடர் மிரட்டல்கள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, அந்நாட்டில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் ‘எக்ஸ்பிரசோ’ (Expreso)நாளிதழ் அக்டோபர் 9ஆம் தேதியுடன் தனது அச்சுப் பதிப்பைநிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. இனி இணையத்தில் மட்டுமேசெய்திகளை வெளியிடப் போவதாகவும் கூறியுள்ளது.

நாளிதழ் மூடப்படுவதற்கான காரணத்தை நிர்வாகம் வெளிப்படையாகக் கூறத் தயங்கினாலும், ஜனாதிபதி நோபோவாவின் சர்வாதிகாரப் போக்கே இதற்கு முழுக் காரணம்என அந்நாட்டின் சமூக ஆர்வலர்களும் ஜனநாயக அமைப்புகளும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளன.

எக்ஸ்பிரசோ நாளிதழ் ஒன்றும் முற்போக்கு பத்திரிகை அல்ல. இடதுசாரிகள் மீது பொய்ப் பிரச்சாரங்களையும் வெறுப்பு கருத்துக்களையும் பரப்பி தீவிர வலதுசாரி மற்றும் முதலாளித்துவ ஆதரவு கருத்துக்களுக்கு ஆதரவாக செயல்பட்ட பத்திரிக்கை தான். முன்னாள் இடதுசாரி ஜனாதிபதி ரஃபேல் கொரியாவின் (2007-2017) முற்போக்கு அரசுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டது. நோபோவா பதவியேற்றபிறகு அவரை ஆதரித்தே செய்திகளை எழுதியது.ஆனால், நாட்கள் செல்லச் செல்லநோபோவா அரசின் ஊழல்களையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் எக்ஸ்பிரசோ நாளிதழ் செய்தியாக வெளியிடத் தொடங்கியது. விமர்சனங்களை சகித்துக்கொள்ள முடியாத நோபோவா, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நாளிதழை நசுக்கத் தொடங்கினார்.

வருமான வரித்துறை மற்றும் விசாரணை அமைப்புகளை ஏவிவிட்டு, நாளிதழின் முக்கிய முதலீட்டாளர்கள் மற்றும் விளம்பரதாரர்களை ஈக்வடார் அரசு மிரட்டியுள்ளது. இதன் விளைவாக, நாளிதழுக்கு வந்துகொண்டிருந்த விளம்பர வருவாயில் சுமார் 70 சதவிகிதம் வரை சரிந்தது. பொருளாதார ரீதியாக நிறுவனத்தின் கழுத்தை நெரித்து, அதை திவாலாக்கும் முயற்சியில் அரசு இறங்கியது.

மேலும், அரசைத் தொடர்ந்துவிமர்சித்து வந்த மூத்த பத்திரிகையாளர்களை பணியிலிருந்து நீக்கினால், நாளிதழ் மீதான ஒடுக்குமுறையை நிறுத்துவதாக அரசு பேரம் பேசிய அதிர்ச்சித் தகவலும் தற்போது அம்பலமாகியுள்ளது. ஆனால், அந்தப்பத்திரிகையாளர்களைக் காட்டிக்கொடுக்க நிர்வாகம் மறுத்துவிட்டது.

ஈக்வடாரில் ஊடகங்கள் மற்றும்பத்திரிகையாளர்கள் குறிவைக்கப்படுவது இது முதல் முறையல்ல. அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டிய அலோண்ட்ரா சாண்டியாகோ என்றபத்திரிகையாளர் நாட்டை விட்டே வெளியேற்றப்பட்டார். மின்துறை ஒப்பந்தங்களில் நடந்தமெகா ஊழல்களை அம்பலப்படுத்திய ஊடகங்கள்அச்சுறுத்தப்பட்டன. பொது சுகாதாரத்துறையில் மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதை செய்தியாக வெளியிட்டதற்காக, ஒரு பெண்பத்திரிகையாளரின் கணவர் மீது அரசு பழிவாங்கும்நோக்கில் விசாரணையைத் தொடங்கியது.