முந்தய பக்கம்

ஆப்பிரிக்க பேச்சுவார்த்தை!

3 Nov 2026, 10:42 pm
ஆப்பிரிக்க பேச்சுவார்த்தை!

ஆப்பிரிக்க பேச்சுவார்த்தை!

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம்ஈகோவாஸ் - ECOWAS) மற்றும் சாகெல் நாடுகளின் கூட்டணி (AES) ஆகியவற்றுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன. சாகெல் நாடுகளில் ராணுவத்தின் தலைமையில் நடைபெறும் அரசாங்கங்கள், தேசிய இறையாண்மையை மையமாகக் கொண்டு, மேற்கத்திய செல்வாக்கை மறுதலிக்கும் அரசியல் பாதையைப் பின்பற்றி வருகின்றன.

2020-க்கும் 2023-க்கும் இடையே மாலி, புர்கினா பாஸோ மற்றும் நைஜரில் ராணுவப் புரட்சிகள் வெற்றி பெற்ற பிறகு இரு அமைப்புகளுக்கும் இடையே உறவுகள் சீர்கேடடைந்தன. ஈகோவாஸ், சாகெல்நாடுகளின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. 2024 ஜனவரியில் மூன்று சாகெல் நாடுகளும் ஈகோவாஸ் அமைப்பிலிருந்து வெளியேறும் முடிவை அறிவித்தன; 2025 ஜனவரி 29-இல் வெளியேறவும் செய்தன.

2023 செப்டம்பரில் மூன்று நாடுகள் கொண்ட சாகெல் கூட்டணி அமைக்கப்பட்டது. மாலி, புர்கினா பாஸோ மற்றும்

நைஜர் ஆகிய மூன்று நாடுகளும் தங்களுக்கிடையே ஒத்துழைப்பை வளர்த்துக்கொண்டன. சாகெல் கூட்டணியின் ஆதரவாளர்கள், மேற்கத்திய நாடுகளின் — குறிப்பாக பிரெஞ்சு — நலன்களை ஈகோவாஸ் பாதுகாப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.2025 மே 22-இல் ஈகோவாஸ்மற்றும் சாகெல் கூட்டணிகளுக்கு இடையே கலந்தாலோசனை நடைபெற்றது. செனெகல் நாட்டின் தாகர் நகரில் 2026அக்டோபர் 17-இல் இரு கூட்டணிகளும் பேச்சுவார்த்தை மூலம் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது என உடன்பாடு கண்டன. இரு அமைப்புகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘சகோதரத்துவ, பரஸ்பரமரியாதை, வெளிப்படைத்தன்மையுடன் இரு அமைப்புகளும் செயல்படும்’ என்று கூறப்பட்டது. மேற்காப்பிரிக்க மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உறவுகள்அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இரு அமைப்புகளின் மக்களுக்கிடையே வணிகம், இடம்பெயர்தல், குடும்ப உறவுகள் மற்றும் கலாச்சாரப் பிணைப்புகள் நிலவுகின்றன.

Share
FacebookXWhatsAppTelegram