பொருளாதார நோபல் 2026: மீண்டும் நவதாராளவாதம் - அபிநவ் சூர்யா
1 Nov 2026, 9:58 pm

பொருளாதார நோபல் 2026: மீண்டும் நவதாராளவாதம் - அபிநவ் சூர்யா

“மனிதர்களின் உணர்வுநிலை அவர்களது இருப்பைத் தீர்மானிப்பதில்லை; மாறாக, அவர்களின் சமூக இருப்பே அவர்களது உணர்வுநிலையைத் தீர்மானிக்கிறது” என்றார் மாமேதை மார்க்ஸ். நாம் வாழும் சூழலும் சமூக அமைப்புமே நமது சிந்தனையையும் நடத்தையையும் வடிவமைக்கின்றன என்பது இதன் பொருள்.

ஏழைகள் தங்கள் வருமானம் முழுவதையும் செலவழித்துவிடுவதாலும், ‘முதலீடு’ செய்து முன்னேறும் மனப்போக்கு இல்லாததாலும்தான் ஏழைகளாகவேஇருக்கிறார்கள் என்று நவதாராளவாதச் சிந்தனையாளர்கள் வாதிடுகின்றனர். அதாவது, மக்களின் சிந்தனையிலிருந்தே வறுமை உருவாகிறது என்கிறார்கள். ஆனால் முதலாளித்துவச் சுரண்டலே வறுமைக்குக் காரணம் என்கின்றனர் மார்க்சிஸ்டுகள். உயிர்வாழ்வதற்கே சம்பாதிப்பது அனைத்தையும் செலவழிக்கவேண்டியிருப்பதால்தான் ஏழைகளால் முதலீடு செய்ய முடிவதில்லை. அவர்களது வறுமைமனப்போக்கினால் அல்ல, அவர்கள் வாழும் பொருளாதார அமைப்பினால் உருவானது. மார்க்சியத்தின் முக்கிய அடித்தளமான பொருள்முதல்வாதம் இதுவே.

இந்த ஆண்டின் பொருளாதார நோபல் பரிசு, மார்க்சியப் புரிதலுக்கு முற்றிலும் எதிரான கருத்து முதல்வாதங்களை முன்வைக்கும் ராபர்ட் (பாப்) ஹால், மைக்கேல் உட்ஃபோர்டு ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் யார், அவர்களின் பணி என்ன, அத்தகைய ஆய்வுகள் இன்றைய நவதாராளவாதக் கொள்கைகளுக்கு எவ்வாறு அடித்தளமாகிறது என்பதைப் புரிந்துகொள்ள, 20ஆம் நூற்றாண்டின்தொடக்கத்துக்குச்செல்ல வேண்டும்.

கீன்ஸும் பிலிப்ஸ் வளைவும்

பிரிட்டிஷ் பொருளாதார அறிஞர் ஜான் மேனார்டு கீன்ஸ் நிச்சயமாக ஒரு ‘புரட்சிகர’ அறிஞர் அல்ல; முதலாளித்துவத்தைக் காப்பாற்றவே அவர் முயன்றார். ஆனால் பொருளாதாரத் துறைக்கு முக்கியப் பங்களிப்புகளைச் செய்தவர். அவருக்கு முன், முதலாளித்துவச் சந்தைகள் சரியாகச் செயல்படும், முதலாளித்துவம் ஒருபோதும் நெருக்கடியைச் சந்திக்காது, அரசு சந்தையில் தலையிடக் கூடாது என்று பிரதானப் பொருளியலாளர்கள் கருதினர். 1930களின் பொருளாதாரப் பெருமந்தநிலையின் போது, முதலாளித்துவத்தில் நிலையற்ற தன்மையைத் தடுக்கும் வழிமுறை எதுவும் இல்லை, நெருக்கடிகள் உருவாகலாம் என்று கீன்ஸ் வாதிட்டார். நெருக்கடிக் காலங்களில் அரசு கூடுதலாகச் செலவழித்து ‘கிராக்கியை’ மீட்டெடுக்கவும், முதலீட்டாளர்களின் ‘மிருகத்தனமான உந்துதல்களை’ மீண்டும் எழுப்பவும் முடியும் என்றார்.

எனினும், நெருக்கடி கடந்து அனைவருக்கும் வேலை கிடைத்த பின்னரும் அரசு தொடர்ந்து செலவழித்தால், உற்பத்தி செய்யக்கூடிய அளவைக் கிராக்கி மிஞ்சி, பணவீக்கம் ஏற்படலாம் என்றும் அவர் வாதிட்டார். இந்த வாதமே 1958இல் புகழ்பெற்ற‘பிலிப்ஸ் வளைவு’ உருவாக வழிவகுத்தது. வேலையின்மை அதிகமாக இருக்கும்போது கிராக்கிப் பற்றாக்குறையால் பணவீக்கம் குறைவாகவும், வேலையின்மைகுறைவாக இருக்கும்போது அதிகப்படியான கிராக்கியால் பணவீக்கம் அதிகமாகவும் இருக்கும் என்று அது கூறியது.

கீன்ஸியத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்

இரண்டாம் உலகப் போருக்குப் பின், தங்கள் நாடுகளில் சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த விரும்பிய மேற்கத்திய அரசுகள், மக்களைக் கம்யூனிச இயக்கங்களிலிருந்து விலக்கி வைக்க ‘சேமநலனுக்காக’ப் பெருமளவில் செலவிடத்தொடங்கின. அதை நியாயப்படுத்தப் பல மேற்கத்தியஅறிஞர்கள் கீன்ஸின் கோட்பாட்டைப் பயன்படுத்தினர். பொதுச் செலவினத்தின் மூலம் கிராக்கியை ‘நிர்வகிக்கவும்’, நெருக்கடிகளைத் தடுக்கவும் அரசுகளால் முடியும் என்று அவர்கள் வாதிட்டனர். 1970கள்வரை எல்லாம் சரியாக நடப்பது போலவேதோன்றியது.

ஆனால் 1970களில் ஏற்பட்ட கடுமையான முதலாளித்துவ நெருக்கடி ‘தேக்கநிலையுடன் கூடியபணவீக்கத்தை’ உருவாக்கியது; வேலையின்மையும் பணவீக்கமும் ஒருசேர உயர்ந்தன. இதை விளக்கமுடியாமல் கீன்ஸியர்கள் திணறியபோது, ‘அதிகப்படியான அரசுத் தலையீடே’ நெருக்கடிக்குக்காரணம், அரசு விலகினால் சந்தைகள் தாமே சரிசெய்துகொள்ளும் என்று நவதாராளவாதிகள் களமிறங்கினர். கீன்ஸியக் கோட்பாடு ஓரங்கட்டப்பட்டது; நவதாராளவாதம் உலகை ஆளத் தொடங்கியது. அரசின் பங்கு சுருங்க, சந்தையின் பெயரால் பெருமுதலாளிகளின் ஆதிக்கம்விரிந்தது.

‘புதிய கீன்ஸியர்கள்’: பெயர் மட்டுமே கீன்ஸ்

சில கீன்ஸியர்கள் இந்தக் காலத்திலும் செல்வாக்கைத் தக்கவைக்க நவதாராளவாதிகளுடன் கைகோர்த்தனர். மக்களின் ‘எதிர்பார்ப்புகள்’, ‘விருப்பங்கள்’, ‘நடத்தை’ ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்று ஆய்வு செய்து, பிலிப்ஸ்வளைவையும் ‘எதிர்பார்ப்புகளை’ உள்ளடக்கியதாக மாற்றினர். சமூக அமைப்பு மக்களின் சிந்தனையைவடிவமைப்பதை அல்ல, மக்களின் சிந்தனை சமூக அமைப்பை வடிவமைப்பதையே அவர்கள் ஆய்வு செய்தனர்.வேறு வார்த்தைகளில் சொன்னால், பொருள்முதல்வாதத்தை நிராகரித்துக் கருத்து முதல்வாதத்தைத்தேர்ந்தெடுத்தனர். மார்க்ஸ் சொன்னதைத் தலைகீழாக்கினர். தங்களை ‘புதிய கீன்ஸியர்கள்’ என்றுஅழைத்துக்கொண்டாலும், அவர்களது கோட்பாடுகள் கீன்ஸுக்கு முற்றிலும் எதிரானவை.

நிதி ஒழுங்கும் பணவியல் ஒழுங்கும்

1990களில் சோவியத் ஒன்றியம் சிதைந்த பின், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள்வளரும் நாடுகள் மீது நவதாராளவாதக் கொள்கைகளைத் திணித்தன. சந்தைகளை மேற்கத்தியப் பெருமுதலாளிகளுக்குத் திறந்துவிட வேண்டும், அரசுகள் அதிகம் கடன் வாங்கவோ மக்கள் நலனுக்குப் பெருமளவு செலவிடவோ கூடாது என்றன. இதற்கு ‘நிதி ஒழுங்கு’ என்று பெயரிட்டன. மக்கள் நலத்திட்டங்களைவெட்டுவதற்கு சூட்டப்பட்ட அழகான பெயர் அது.கூடவே ‘பணவியல் ஒழுங்கும்’ திணிக்கப்பட்டது; ரிசர்வ் வங்கி போன்ற மத்திய வங்கிகள் என்ன செய்ய

லாம், கூடாது என்பதற்கு விதிகள் விதிக்கப்பட்டன. 1990களுக்கு முன், பல நாடுகளில் மத்திய வங்கிகள்

‘வளர்ச்சி வங்கிகள்’ போலவும் செயல்பட்டு முக்கியத் துறைகளுக்குக் கடன் வழங்கின. இந்தியாவில் தொழில், உள்கட்டமைப்பு வளர்ச்சிக்குக் கடனவழங்க அரசும் ரிசர்வ் வங்கியும் ஐடிபிஐ, ஐசிஐசிஐபோன்ற வளர்ச்சி நிதி நிறுவனங்களைப் பயன்படுத்தின. நவதாராளவாதம் இத்தகைய முயற்சிகளை நிறுத்தியது. பணவீக்கக் கட்டுப்பாடு, ‘பொருளாதார நிலைத்தன்மை’ மட்டுமே மத்திய வங்கியின் வேலை; மற்றவை சந்தையின் பொறுப்பு என்றது. இன்று ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பெரும்பாலானமத்திய வங்கிகள், வட்டி விகிதத்தை மாற்றுவது, விதிகளைத் திருத்துவது, அந்நியச் செலாவணி கையிருப்பைச்சேர்ப்பது ஆகியவற்றைத் தவிர நாட்டின் வளர்ச்சிக்குச் செயலூக்கமான பங்களிப்பு எதையும் செய்வதில்லை.

யாருடைய அமைதிக்காக?

புதிய பிலிப்ஸ் வளைவு, மத்திய வங்கிகள் மீதான நவதாராளவாத விதிகள், ‘நடத்தை’, ‘எதிர்பார்ப்புகள்’ பற்றிய ஆய்வுகள் ஆகியவற்றை ஒன்றிணைத்தனர் புதிய கீன்ஸியர்கள். அரசுகளும் மத்திய வங்கிகளும் விதிகளைப்பின்பற்றி, இன்றும்எதிர்காலத்திலும் என்ன செய்யப் போகின்றன என்பதைத் தெளிவாகத் தெரிவித்தால், ‘அதிர்ச்சிகள்’ இருக்காது, யாரும் பதற்றமடைய மாட்டார்கள், பொருளாதாரம் சுமுகமாக இயங்கும் என்றனர். பணவியல் கொள்கை மக்களின் ‘எதிர்பார்ப்புகளை’ நிர்வகிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்; அதே நேரத்தில் நவதாராளவாதம் விதித்த விதிகளையும் ஒழுங்குமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்பதே அவர்களது வாதம். இந்த ஆண்டு நோபல் பெற்றவர்கள் இந்த வாதத்தைப் பிரபலப்படுத்தியவர்களில் முதன்மை யானவர்கள்.ஆனால் யாரைப் பதற்றமடையாமல் ‘அமைதியாக’ வைத்திருக்க? முக்கியமாக, பெருமுதலாளிகளையும் நிதி முதலீட்டாளர்களையுமே. வேலை இழக்கும் தொழிலாளியின் பதற்றம் இந்தக் கணக்கில் வருவதே இல்லை. எந்த அதிர்ச்சியைப் பற்றியும் கவலைப்படாமல் அவர்கள்தொழிலாளர் வர்க்கத்தைத் தொடர்ந்து சுரண்டுவதை உறுதிசெய்யவே இன்று மத்திய வங்கிகள், குறிப்பாகஇந்திய ரிசர்வ் வங்கி, முயல்கின்றன.

வேலையின்மையே விலை

இவ்விரு தரப்பினரும் கைகோர்த்து ஊக்குவித்ததே‘பணவீக்க இலக்கு நிர்ணய’க் கொள்கை. இந்திய ரிசர்வ் வங்கி 2016இல் அதை அதிகாரப்பூர்வமாக ஏற்றது. வட்டிவிகிதத்தைத் தீர்மானிப்பதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் நவதாராளவாத விதிகளை ரிசர்வ் வங்கி கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று அது கூறுகிறது. புதிய பிலிப்ஸ் வளைவின் அடிப்படையில் அதன் அனுமானம் இதுதான்:பணவீக்கம் அதிகரித்தால் வட்டி விகிதத்தை உயர்த்தவேண்டும்; அதனால் கடன் பெறுவோர் குறைவர், புதியதொழில்கள் குறையும், வேலைவாய்ப்பு குறையும், பணவீக்கம் தணியும். அதாவது, வேலைவாய்ப்பைக் குறைத்துப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது. மக்கள் அதிகவேலையின்மையைத் தாங்கிக்கொண்டால்தான் பணவீக்கம் குறையும் என்கிறது இக்கொள்கை. இது அப்பட்டமான மக்கள் விரோதக் கொள்கை அல்லவாஏனெனில், பணவீக்கம் அதிகரித்தால் பெருமுதலாளிகள், முதலீட்டாளர்களின் செல்வத்தின் மதிப்பு குறையும். அதைப் பாதுகாக்கத் தேவையான எதையும் ரிசர்வ் வங்கி செய்யும் என்று உறுதியாகத் தெரிந்தால், அவர்கள் என்ன ‘எதிர்பார்க்க’ வேண்டும் என்பதும் தெரியும்; பதற்றமின்றித் தங்கள் சுரண்டலைதொடர முடியும். எனவே, இந்த ‘விதிகளும்’ ‘பணவீக்கக் கட்டுப்பாடும்’ பொதுமக்களுக்காக உருவாக்கப்பட்டவை அல்ல; தொழிலாளர்களுக்காகச் செயல்படுபவையும் அல்ல. பெருமுதலாளிகளின் செல்வத்தைக் காப்பதே அவற்றின் உண்மையான நோக்கம்.

புதிய கீன்ஸிய, நவதாராளவாதக் கொள்கைகளை எதிர்க்க இன்னும் பல தத்துவார்த்தக் காரணங்கள் உள்ளன.அவை தனியாக விவாதிக்கப்பட வேண்டியவை. ஆனால் அடிப்படையில், இந்த ஆண்டின் பொருளாதார நோபல் பரிசு, உலகெங்கும் உழைக்கும் மக்களுக்கு எதிராக மேலும் தீவிரமான நவதாராளவாதக் கொள்கைகளை முன்னெடுக்க வழங்கப்பட்ட மற்றொரு‘பச்சைக்கொடி’ மட்டுமே.