கியூபா மீதான பொருளாதாரத் தடை
2 Apr 2026, 5:30 am

கியூபா மீதான பொருளாதாரத் தடை

அமெரிக்கா கியூபா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையால் அங்குள்ள மாற்றுத்திறனாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஊனமுற்றோருக்கான தேசிய மேடை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தத் தடையால் உயிர்காக்கும் மருந்துகள், செயற்கை உறுப்புகள் மற்றும் மருத்துவத் தொழில்நுட்பங்கள் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சுமார் 50 லட்சம் நோயாளிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முற்றுகையை உடனடியாக நீக்க வேண்டும் என சர்வதேச சமூகத்தை ஊனமுற்றோருக்கான தேசிய மேடை கேட்டுக்கொண்டுள்ளது. இந்திய அரசு இதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.