3ஆவது கட்டமாக 16 மாநிலம், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்
14 May 2026, 8:39 pm
<p><strong>3ஆவது கட்டமாக 16 மாநிலம், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்</strong></p><p>3ஆவது கட்டமாக 16 மாநிலம், 3 யூனியன் பிரதேசங்களில் வாக்கா ளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான (எஸ்ஐஆர்) அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வியாழனன்று வெளியிட்டது. இதுதொ டர்பான அறிக்கையில், “ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், சண்டிகர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி & டாமன் மற்றும் டையூ, ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, தில்லி, ஒடிசா, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா, தெலுங்கானா, உத்தர கண்ட் என 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணி மே 30 முதல் அக்டோபர் 14 வரை நடைபெறும். இந்த மூன்றாம் கட்டப் பணி முடிவடைந்தவுடன், இமாச்சலப் பிர தேசம், ஜம்மு-காஷ்மீர், லடாக் தவிர நாடு முழுவதும் எஸ்ஐஆர் பணி நிறைவடை யும். 3ஆம் கட்டப் பணியில் சுமார் 3.94 லட்சம் வாக்குச்சாவடி நிலை அலுவ லர்கள் 36.73 கோடி வாக்காளர்களின் வீடு களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்வார்கள். இவர்களுக்கு அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட 3.42 லட்சம் முகவர்கள் உதவியாக இருப்பார்கள். அதன்பின்னர் வரைவு வாக்காளர் பட்டி யல் ஜூலை 5 முதல் அக்டோபர் 21 வரை வெளியிடப்படும்” என அதில் கூறப்பட்டுள்ளது.</p>
