முந்தய பக்கம்

தீவிரமடையும் எபோலா வைரஸ் பரவல் பலி எண்ணிக்கை 216ஆக உயர்வு

24 May 2026, 8:40 pm
தீவிரமடையும் எபோலா வைரஸ் பரவல் பலி எண்ணிக்கை 216ஆக உயர்வு

தீவிரமடையும் எபோலா வைரஸ் பரவல் பலி எண்ணிக்கை 216ஆக உயர்வு

மத்திய ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்ல ஒன்றிய அரசு கட்டுப்பாடு புதுதில்லி கொடியா ஆட்கொல்லி நோயான எபோலா வைரஸ் (புண்டிபுகியோ) ஆப்பி ரிக்க நாடுகளில் மீண்டும் வேகமாக பரவி வருகிறது.

இதில் காங்கோ குடியரசு, உகாண்டா, தெற்கு சூடான் உள்ளிட்ட மத்திய ஆப்பிரிக்க நாடுகள் எபோலா வைரஸின் ஹாட்ஸ்பாட்டாக உள்ளன.

அங்கு மிக குறுகிய காலத்தில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 216 ஆக உயர்ந் துள்ளது.

குறிப்பாக 3 நாடுகளிலும் உறு திப்படுத்தப்பட்ட எபோலா வைரஸ் பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 968 ஆக உள்ளது.

அவர்களில் பெரும்பா லானோர் கவலைக்கிடமாக உள்ளன.

இந்நிலையில், எபோலா வைரஸ் பர வல் காரணமாக ஆப்பிரிக்க நாடுக ளுக்குச் செல்ல ஒன்றிய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதுதொடர்பாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில்,”மத்திய ஆப்பி ரிக்காவில் எபோலா பரவலை உலக சுகா தார அமைப்பு “உலகளாவிய பொது சுகா தார அவசரநிலை” என அறிவித்துள்ளது.

அதனால் மத்திய ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் எபோலா வைரஸ் பரவி வரு வதைக் கருத்தில் கொண்டு, காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு அத்தி யாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கு மாறு இந்திய மக்களுக்கு அறிவுறுத்து கிறோம்” என அதில் கூறப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram