மீண்டும் பரவும் எபோலா வைரஸ் விமான நிலையங்களில் அவசரநிலை அறிவித்தது ஒன்றிய அரசு
22 May 2026, 8:42 pm

மீண்டும் பரவும் எபோலா வைரஸ் விமான நிலையங்களில் அவசரநிலை அறிவித்தது ஒன்றிய அரசு

புதுதில்லி எபோலா என்பது மிகவும் ஆபத்தான, உயிரிழ ப்பை ஏற்படுத்தக்கூடிய தீவிரமான வைரஸ் தொற்றுநோயாகும். இது மனிதர்கள், மனிதக்குரங்கு போன்ற பாலூட்டிகளைப் பாதிக் கும் ஒரு கடுமையான ரத்தப் போக்கு காய்ச்சல் வகையைச் சேர்ந்தது.

எபோலா நோய்த்தொற்றின் சராசரி இறப்பு விகிதம் சுமார் 50% ஆகும். அதாவது இந்நோய் பாதிப்பிற்குள்ளாகும் 100 பேரில் சராசரியாக 50 பேர் உயிரிழக்க நேரிடுகிறது. 1976ஆம் ஆண்டு இந்த வைரஸ் முதன்முதலில் கண்டறி யப்பட்டது. ஆப்பிரிக்க நாடுகள் தான் பரவலின் ஹாட்ஸ்பாட்டாக உள்ளன. இதுவரை சுமார் 15,000க்கும் மேற்பட்டோர் உயிரி ழந்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்கப் பேரிடர் (2014–2016) தான் எபோலா வரலாற்றிலேயே மிகக் கொடிய, பெரிய பரவல் ஆகும். கினியா, லைபீரியா, சியாராலியோன் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட இந்தப் பரவலில் மட்டும் 28,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 11,325 பேர் உயிரிழந்தனர்.

கட்டுப்பாடு

இந்நிலையில், ஆப்பிரிக்க நாடு களில் மீண்டும் எபோலா வைரஸ் தொடங்கியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் வகைப்பாட்டின் அடிப்படையில், காங்கோ ஜனநா யகக் குடியரசு, உகாண்டா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வரு கிறது.

இதனால் ஆப்பிரிக்காவிலிரு ந்து வரும் பயணிகளுக்கு எபோலா எச்சரிக்கைக்கான அவசர நிலை யை அறிவித்துள்ளது ஒன்றிய அரசு. இதுதொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”எபோலா வைரஸ் பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வரும் அல்லது அந்த நாடுகள் வழி யாகப் பயணிக்கும் பயணிகள் எபோலா அறிகுறிகள் அல்லது பாதி ப்புள்ளவர்களுடன் தொடர்பில் இருந்த வரலாற்றைக் கொண்ட பயணிகள், குடியுரிமைத் துறை அனுமதிக்கு முன்பாகவே விமான நிலைய சுகாதார அதிகாரிகளிடம் தகவல்கள் தெரிவிக்க வேண்டும். அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்த வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

தில்லி

இதனை தொடர்ந்து தில்லி சர்வதேச விமான நிலையத்தில், “பயணிகள் தங்களுக்குக் காய்ச்சல், உடல் சோர்வு, தலை வலி, தசை வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு, தொண்டை வலி, இரத்தப் போக்கு போன்ற அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்பதை தெரிவிக்க வேண்டும். இந்தியா வந்திறங்கிய 21 நாட்களுக்குள் பயணிகளுக்கு ஏதேனும் அறி குறிகள் தென்பட்டால், அவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும், பயண வர லாற்றை அதிகாரிகளிடம் தெரி விக்க வேண்டும்.” என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் பாதிப்பு இல்லை

எபோலா தடுப்புத் தயார்நிலை, அதன் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, ஒன்றிய சுகாதாரத் துறைச் செய லாளர் புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா தலைமையில் மாநிலங்கள், யூனி யன் பிரதேசங்களின் சுகாதாரச் செயலாளர்களுடனான உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் 2 நாட்களுக்கு முன் நடைபெற்றது. இந்த கூட்டத் திற்குப் பின் இந்தியாவில் இது வரை யாருக்கும் எபோலா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று ஒன்றிய சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ள னர்.

இருப்பினும், எபோலா பாதி ப்பை உலக சுகாதார அமைப்பு ‘சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலை’யாக அறி வித்ததையடுத்து, முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக நாடு தழுவிய கண்காணிப்பு, தயார்நி லை நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தீவிரப்படுத்தியுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சக அதி காரப்பூர்வ வட்டாரங்கள் தெரி வித்துள்ளன.