அகமதாபாத் குஜராத்தில் நிலநடுக்கம் குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில்
26 Dec 2025, 3:44 pm
<p><strong>அகமதாபாத் குஜராத்தில் நிலநடுக்கம் குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில்</strong></p>
<p>வெள்ளிக் கிழமை அதிகாலை சுமார் 4:30 மணியள வில் 4.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்ச் மாவட்டப் பகுதி யில் பூமியின் அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதன் மையப்புள்ளி 23.65 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 70.23 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் அமைந்திருந்தது. இந்த மிதமான நில நடுக்கத்தால் உயிரிழப்புகளோ அல்லது பெரிய அளவிலான சொத்து சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை. உலகின் மிகப்பெரிய உப்புப் பாலைவனப் பகுதியான கட்ச் மாவட்டம் அதிக நிலநடுக்க அபாயம் உள்ள பகுதி யாகும். இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது சகஜமானது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
