உத்தரகண்டில் நிலநடுக்கம்
30 Nov 2025, 3:38 pm
<p><strong>உத்தரகண்டில் நிலநடுக்கம் </strong></p>
<p>உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில், ஞாயிறன்று காலை 10.27 மணியளவில் ரிக்டர் அளவில் 3.7 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள் ளது. நிலநடுக்கம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. நிலநடுக்கத்தைத் தொட ர்ந்து வீடுகளை விட்டு வெளியேறிய மக் கள் தெருக்களில் தஞ்சமடைந்தனர். சாமோலி மட்டுமின்றி கர்ணபிரயாக், நாராயண்பாக், தாராலி மற்றும் தேவால் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உண ரப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p>
