முந்தய பக்கம்

ஊதிய உயர்வு மற்றும் பணி பாதுகாப்பு முன்பருவக்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை

24 Feb 2026, 3:55 pm
ஊதிய உயர்வு மற்றும் பணி பாதுகாப்பு  முன்பருவக்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை
<p><strong>ஊதிய உயர்வு மற்றும் பணி பாதுகாப்பு&nbsp; முன்பருவக்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை</strong></p> <p>ராணிப்பேட்டை, பிப். 24: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளைக் கையாண்டு வரும் 2,381 முன்பருவக்கல்வி ஆசிரியர்கள், ஊதிய உயர்வு மற்றும் பணி பாதுகாப்புக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தற்போது ரூ.5,000 மட்டுமே மாத ஊதிய மாக வழங்கப்படுவதாகவும், ஒவ்வொரு கல்வியாண்டு முடிவிலும் பணி நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் மறு நியமனம் செய்ய ப்படும் முறையால் மன உளைச்சல் ஏற்படு வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி மாணவர்களுக்குத் தனி வகுப்பறை, சீருடை வழங்கவும், தங்களுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் ஊதிய உயர்வு வழங்கவும் அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத் தினர்.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram