முந்தய பக்கம்

‘இ-20 பெட்ரோல்’ மைலேஜ் குறைக்கும் ஒப்புக்கொண்ட மோடி அரசு

3 Jul 2026, 7:25 pm
‘இ-20 பெட்ரோல்’ மைலேஜ் குறைக்கும்  ஒப்புக்கொண்ட மோடி அரசு
<p><strong>‘இ-20 பெட்ரோல்’ மைலேஜ் குறைக்கும் ஒப்புக்கொண்ட மோடி அரசு</strong></p><p>சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும் ஒன்றிய அரசு பெட்ரோலில் எத்தனால் கலப்புத் திட்டத்தைத் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. 20% எத்தனால் கலக்கப்படும் ‘இ-20 பெட்ரோல் (E20)’ பயன்பாடு குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு விவாதங்களும், விமர்சனங்களும் எழுந்து வருகிறது. குறிப்பாக மைலேஜ் குறையும் என்ற சர்ச்சையான தகவல் களும் அடுத்தடுத்து வெளியாகி வரு கின்றன.</p><p>இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகை யில், “பெட்ரோலில் 20% எத்தனால் கலப்ப தால் வாகனங்களின் மைலேஜ் சிறிய அள வில் (சற்று) குறையலாம். அதே நேரத்தில், எத்தனால் கலப்பால் வாகனத்தின் செயல்திறன் மேம்படும், வாகனத்தின் வேகம் எடுக்கும் திறன் அதிகரிக்கும். என்ஜின் சத்தம் குறையும். தற்போது நடை முறையில் உள்ள 20% எத்தனால் கலப்புத் திட்டம், அடுத்தகட்டமாக 25% ஆக உயர்த்தப்பட உள்ளது. இதற்கான தேவையான அனைத்து தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு சோதனைகளும் முழு மையாக முடிந்த பின்னர், பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படும் அளவு 25 சதவீத மாக அதிகரிக்கப்படும்” என அவர் கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram