தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இ20 எனும் 420 மக்களின் பாக்கெட்டில் கைவைக்கும் எத்தனால் அரசியல்!

18 Jul 2026, 9:02 pm
இ20 எனும் 420 மக்களின் பாக்கெட்டில்  கைவைக்கும் எத்தனால் அரசியல்!

இ20 எனும் 420 மக்களின் பாக்கெட்டில் கைவைக்கும் எத்தனால் அரசியல்!

‘இ20’ எனப்படும் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாடு குறித்து நாடு முழுவதும் விவாதங் கள் எழுந்துள்ளன. வாகன ஓட்டிகளின் கடும் குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளிவிட்டு, இது நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான மிகச் சிறந்த மாற்றம் என்று பாஜக அரசு தொடர்ந்து வாதிட்டு வருகிறது. எத்தனால் அதிக ஆக்டேன் எண் கொண்டிருப்பதால் என்ஜின் செயல்திறன் அதிகரிக்கும், சுற்றுச்சூழல் மாசு குறையும், அந்நியச் செலாவணி மிச்சமாகும் என்பதே அர சின் பிரதான வாதம். ஆனால், இந்த வாதங்க ளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் உண்மை, மக்களை ஏமாற்றி அவர்களது பணத்தைச் சூறையாடும் ஒரு ‘420’ வேலை என்பது தெளி வாகத் தெரிகிறது.

இந்த எத்தனால் கலப்புத் திட்டத்தால் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டுபவர்கள் யார்? ந்தியாவில் எத்தனால் உற்பத்தியில் முன்ன ணியில் உள்ள ‘சியான் அக்ரோ இண்ட ஸ்ட்ரீஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்’ நிறுவனத்தின் பங்குகளில் 60 சதவீதத்திற்கும் மேல் ஒன்றிய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் குடும்பத்தினரு க்குச் சொந்தமானது. இது உட்பட பல நிறு வனங்கள் உள்ளன.

அறிவியல் உண்மைகளும் நுகர்வோர் துயரமும் '

அறிவியல் ரீதியாக இ20 பெட்ரோல் வாக னங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எத்தனால் ஈரப்பதத்தை ஈர்க்கும் (Hygroscopic) தன்மை கொண்டது. இது பெட்ரோல் டேங்கில் நீரைச் சேர்த்து அமிலத் தன்மையை உருவாக்குகிறது. இதனால் அலுமினியம் மற்றும் இரும்பு டேங்குகள் அரிக் கப்படுகின்றன. மேலும், வாகனங்களில் உள்ள ரப்பர் குழாய்கள் மற்றும் ஓ-ரிங்குக ளைச் சிதைத்து, அவற்றை வீங்கச் செய்து வெடிக்க வைக்கிறது. நவீன டர்போ என்ஜின்களில், எத்தனால் அதிக வெப்பத்தை உருவாக்குவதால் ‘எஞ்சின் நாக்’ (Engine Knock) ஏற்படுகிறது. லோ-ஸ்பீட் ப்ரீ-இக்னிஷன் (LSPI) எனப்படும் வெடிப்பு நிகழ்வால் பிஸ்டன்கள் சேதமடைந்து என்ஜின் பாழாகிறது. எத்தனால் கலந்த பெட் ரோல் மைலேஜைக் குறைக்கும் என்பதை ஒன்றிய அரசே ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், 3-5% குறைவதாக அரசு கூறும் புள்ளிவிவரங்கள் முழு உண்மையல்ல. ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ நடத்திய ஆய்வில், 2023-க்கு முன் தயாரிக்கப்பட்ட வாகனங்க ளில் 10 சதவீதத்திற்கும் மேலாக மைலேஜ் சரிந் திருப்பதாக 66 சதவீத நுகர்வோர் தெரி வித்துள்ளனர்.

பழைய வாகனங்களின் அவலம்

2023-ஆம் ஆண்டுக்கு முன் தயாரிக்கப் பட்ட பெரும்பாலான வாகனங்கள் இ10 (10% எத்தனால்) கலப்பிற்கு மட்டுமே வடிவமைக்கப் பட்டவை. இப்போது இ20 கட்டாயமாக்கப்படு வதால், அந்த வாகனங்களின் ஆயுள் குறை கிறது. இதைச் சரிசெய்ய நுகர்வோர் ஆயி ரக்கணக்கில் செலவிட வேண்டியுள்ளது. பிரே சில் நாடு முப்பது ஆண்டுகளாகப் படிப்படியா கவே இத்தகைய மாற்றங்களைக் கொண்டு வந்தது. அங்கு நுகர்வோருக்குப் பல எரி பொருள் தேர்வுகள் வழங்கப்பட்டன. ஆனால், இந்தியாவில் எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி அவசரகதியில் இ20 திணிக்கப் பட்டுள்ளது. இ20 எரிபொருளால் பழுதாகும் வாக னங்களுக்குக் காப்பீடு கிடைப்பதில்லை; வாகன நிறுவனங்களும் பொறுப்பேற்ப தில்லை. பெட்ரோல் விலையும் குறைய வில்லை. மாறாக, எத்தனால் கலக்காத சுத்தமான பெட்ரோலைத் தேர்வு செய்பவர்கள் கூடுதல் விலை கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் மீதான சுமை

ஏற்கெனவே வரி மற்றும் சுங்கக் கட்டணச் சுமைகளால் திணறும் சாமானிய மக்கள், இப்போது தரம் குறைந்த எரிபொருளுக்கு அதிக விலை கொடுத்து, தங்கள் வாகனத்தின் ஆயுளையும் பணத்தையும் இழந்து கொண்டி ருக்கிறார்கள். இ20 பிரச்சனை பெரும் சிக்க லாக இருக்கும் நிலையில், அரசு இ30-க்கு மாறினால் பழைய வாகனங்கள் முழு மையாகச் செயலிழந்துவிடும். பாஜக கூட்ட ணிக்கு வாக்களித்தவர்களில் 50 சதவீதத்திற்கு மேல் இந்த பெட்ரோலுக்கு எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.

மொத்தத்தில், இந்தத் திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கும் பசுமை எரிசக்திக்கும் உதவு வதை விட, அதிகாரத்திலிருப்பவர்களின் குடும்ப வருமானத்தை உயர்த்துவதற்கே முன் னுரிமை அளிக்கிறது. நுகர்வோர் உரிமைக ளைப் புறக்கணித்து, வாகனங்களின் ஆயு ளைக் குறைத்து, மக்கள் மீது கூடுதல் சுமை யைச் சுமத்தும் இந்த இ20 கொள்கை, அரசின் மக்கள் விரோத முகத்தையே காட்டுகிறது. சேதுசிவன் தகவல் ஆதாரம்: மின்ட், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், பிசினஸ் ஸ்டாண்டர்டு.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.