திருச்செங்கோட்டில் ஈ.ஆர். ஈஸ்வரன் வாக்கு சேகரிப்பு
6 Apr 2026, 5:37 pm
<p><strong>திருச்செங்கோட்டில் ஈ.ஆர். ஈஸ்வரன் வாக்கு சேகரிப்பு</strong></p>
<p>நாமக்கல், ஏப்.6- திருச்செங்கோடு சட்ட மன்றத் தொகுதியில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியி டும் வேட்பாளர் ஈ.ஆர். ஈஸ் வரன் தீவிர வாக்கு சேகரிப் பில் ஈடுபட்டார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், ஞாயிறன்று திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மண்டக்கா பாளையம், கொசவம்பாளையம், பாரதிநகர், குமாரமங் கலம், போக்கம்பாளையம், புதுப்பாளை யம், உஞ்சனை, மயிலாங்காடு, கல்லாங்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக, குமரமங்கலம் பிரிவு ரோடு அருகில் தேர்தல் பணிமனை அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் இ.ஆர். ஈஸ்வரன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி சின்ராஜ், திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் செல்வராசு, பொதுக் குழு உறுப்பினர் சேரன் சக்திவேல், தேமுதிக மாவட்டச் செயலாளர் விஜய சரவணன், காங் கிரஸ் செங்கோட்டுவேல், தங்கராசு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் ஒன்றியச் கவுன்சிலர் சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப் பினர் தமிழ்மணி, கொமதேக கொங்கு கோமகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.</p>
