தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அனைத்து அரசுப் பணித் தேர்வுகளிலும் வயது உச்சவரம்பை உயர்த்திடுக : வாலிபர் சங்கம் வலியுறுத்தல்!

2 Nov 2026, 9:22 pm
அனைத்து அரசுப் பணித் தேர்வுகளிலும் வயது உச்சவரம்பை உயர்த்திடுக :  வாலிபர் சங்கம் வலியுறுத்தல்!

அனைத்து அரசுப் பணித் தேர்வுகளிலும் வயது உச்சவரம்பை உயர்த்திடுக:

வாலிபர் சங்கம் வலியுறுத்தல்!

சென்னை, நவ. 2 –சில அரசுப் பணித் தேர்வுகளுக்கான வயது உச்சவரம்பை உயர்த்தி யுள்ள தமிழக அரசின் முடிவை வரவேற்கும் அதேவேளையில், இந்த வயது வரம்பு உயர்வை அனைத்துத் துறை அரசுப் பணித் தேர்வுகளுக்கும் உடனடியாக விரிவுபடுத்த வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்துச் சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வராஜ், மாநிலச் செயலாளர் எஸ். கார்த்திக் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில், காலியிடங்கள் உரிய காலத்தில் நிரப்பப்படாதது மற்றும் தேர்வுகளை நடத்துவதில் ஏற்படும் காலதாமதத்தால் லட்சக் கணக்கான இளைஞர்கள் தங்களது வயது வரம்பைஇழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. அரசின் நிர்வாகத் தாமதங்களின் பாதிப்பை இளைஞர்கள் மீது சுமத்துவது நியாயமற்றது.

எனவே, காவல்துறை மற்றும் மின்வாரியத் தேர்வுகள் மட்டுமின்றி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB), ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்,வனத்துறை, போக்கு வரத்துக் கழகங்கள், கூட்டுறவுத் துறை மற்றும் நீதித்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை நேரடிநியமனப் பணிகளுக்கும் வயது உச்சவரம்பு உயர்வைஅரசுப் பொருத்திட வேண்டும். மேலும், காலிப் பணி யிடங்களை முழுமையாகக் கணக்கிட்டு, கால அட்டவணை வெளியிட்டுத் தாமத மின்றி நிரப்பவேண்டும் என வாலிபர் சங்கம் கோரியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.