தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாலிபர் சங்க திருப்பூர் மாவட்டத் தலைவரின் தாயார் மறைவு: மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம்

3 Jun 2026, 9:33 pm
வாலிபர் சங்க திருப்பூர் மாவட்டத் தலைவரின் தாயார் மறைவு: மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம்

வாலிபர் சங்க திருப்பூர் மாவட்டத் தலைவரின் தாயார் மறைவு: மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம்

திருப்பூர், ஜூன் 3- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலை வர் நிருபன் சக்கரவர்த்தியின் தாயார் மீனாட்சி (60), புதன்கிழமை அதிகாலை காலமானார்.

அவரது உடல், குடும்பத் தினரின் ஒப்புதலோடு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. தோட்டத்துப்பாளையத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த மீனாட்சிக்கு, புதனன்று அதிகாலை 1.30 மணி அள வில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உ

டனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், மருத்துவ மனைக்கு வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

இதையடுத்து, அவரது மகனும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவருமான நிருபன் சக்கரவர்த்தி, மகள் யமுனா உள்ளிட்ட குடும்பத்தினர், மறைந்த மீனாட்சியின் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்குத் தானம் செய்ய முன்வந்தனர்.

இல்ல த்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு, அவரது உடல் புதன்கிழமை மாலை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது. மருத்துவக் கல்லூரியிடம் உடல் ஒப்படைப்பு மருத்துவமனை முதல்வர் டாக்டர் மனோன்மணி ஒப்புதலுடன், உடற்கூறி யல் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் ஆறுமுகத்திடம் உடல் தானத்திற் கான படிவத்தை நிருபன் சக்கரவர்த்தி யும் யமுனாவும் வழங்கினர்.

தொடர்ந்து, அதிகாரிகள் உடலைப் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில், சிபிஎம் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பாலமுரளி, மாவட்டப் பொருளாளர் க.சிந்தன் உள்ளிட்ட சிபிஎம் மற்றும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்க நிர்வாகிகள், ஊழி யர்கள் மற்றும் உறவினர்கள் திரளாகப் பங்கேற்றனர். உடல் ஒப்படைக்கப்படும் முன்பாக அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிருபன் சக்கரவர்த்தியின் தந்தை கணேசன் காலமான போதும், அவரது உடலும் இதேபோன்று அரசு மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது தாயாரின் உடலையும் தானமாக வழங்கி அக்குடும்பத்தினர் முன்மாதிரியாகத் திகழ்கின்றனர்.

அண்மையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செய லாளர் சீத்தாராம் யெச்சூரியின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழு வதும் உடல் தான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அப்போது திருப்பூரில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியினரும், வர்க்க வெகுஜன அமைப்புகளின் நிர்வாகிகளும் தங்களின் உடல் தானப் படிவங்களை வழங்கியிருந்தது நினைவுகூரத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.