தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிதம்பரம் அருகே மணல் கொள்ளை தடுத்து நிறுத்திய வாலிபர் சங்கத்தினர்

7 Jul 2026, 10:51 pm
சிதம்பரம் அருகே மணல் கொள்ளை தடுத்து நிறுத்திய வாலிபர் சங்கத்தினர்
<p><strong>சிதம்பரம் அருகே மணல் கொள்ளை தடுத்து நிறுத்திய வாலிபர் சங்கத்தினர்</strong></p><p>பொது மக்கள் பாராட்டு சிதம்பரம், ஜூலை 7 - சிதம்பரம் அருகே உள்ள கிராமங் களில் நடைபெற்ற சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னரை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். சம்பவத்தின் பின்னணி சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட புளியங்குடி மற்றும் உச்சிப்பா ளையம் கிராமங்களின் முக்கிய நீர் ஆதா ரமாக விளங்கும் வாய்க்காலை ஆக்கிர மித்து, தனிநபர் ஒருவர் சட்ட விரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டுவந்துள்ளார். இது குறித்துத் தகவலறிந்த கீரப்பாளையம் ஒன்றிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர் ஸ்ரீதர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று, மணல் அள்ளுவ தற்குத் தீவிர எதிர்ப்பு தெரிவித்தனர். வருவாய்த்துறையின் நடவடிக்கை: தொடர்ந்து, சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சிதம்பரம் வட்டாட்சியருக்கு அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மணல் கொள்ளையில் ஈடுபட்ட வர்களை எச்சரித்ததுடன், அங்கிருந்த இயந்திரங்கள் மற்றும் வாகனங்களை அப்புறப்படுத்தினர். நிர்வாகத்திற்கு கோரிக்கை விளைநிலங்களுக்கு வண்டல் மண் எடுப்பதாக அனுமதி பெற்றுக் கொண்டு, ஏரி, குளம் மற்றும் வாய்க் கால்களில் உள்ள மணலைத் திருடி விற்பனை செய்யும் செயல்கள் அதி கரித்து வருவதாக வாலிபர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இதனைத் தீவிரமாகக் கண்காணித்து, சட்ட விரோத மணல் கொள்்ளையில் ஈடுபடு வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தத் துணிச்சலான செயலில் ஈடுபட்ட வாலிபர் சங்கத்தினருக்கும் இளைஞர்களுக்கும் அப்பகுதி பொது மக்கள் நன்றியையும் பாராட்டுக் களையும் தெரிவித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.