தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீபாவளிக்குப் பிந்தைய தூய்மைப் பணி நவம்பர் 9-ல் மாநிலம் முழுவதும் களமிறங்கும் வாலிபர் சங்கம்!

2 Nov 2026, 11:02 pm
தீபாவளிக்குப் பிந்தைய தூய்மைப் பணி நவம்பர் 9-ல் மாநிலம் முழுவதும் களமிறங்கும் வாலிபர் சங்கம்!
<p><strong>தீபாவளிக்குப் பிந்தைய தூய்மைப் பணி நவம்பர் 9-ல் மாநிலம் முழுவதும் களமிறங்கும் வாலிபர் சங்கம்!</strong></p><p>சென்னை, நவ. 2 –தீபாவளிக் கொண்டாட்டங்களுக்குப் பின்னர் வீதிகளில் குவியும் குப்பைகளை அகற்றித் தூய்மைப் பணியாளர்களின் பணிச்சுமையைப் பகிர்ந்துகொள்ளும் வகையில், நவம்பர் 9 அன்று தமிழ்நாடு முழுவதும் தூய்மைப் பணி இயக்கத்தை நடத்தவுள்ளதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறிவித்துள்ளது.</p><p>இதுகுறித்துச் சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வராஜ், மாநிலச் செயலாளர் எஸ். கார்த்திக் ஆகியோர் வெளியிட்டுள்ளஅறிக்கையில், பண்டிகைக் கொண்டாட்டங்களுக்குப் பின் நகர்ப்புறங்களில் பல மடங்கு குப்பைகள் குவிவதால் தூய்மைப் பணியாளர்கள் கடுமையான பணிச்சுமையை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள னர். உழைக்கும் கரங்களுக்குத் தோள் கொடுக்கும் மனிதநேய நோக்கத்துடன், உள்ளாட்சி அமைப்புகளின் வழிகாட்டு தல்களுக்கு உட்பட்டுத் தூய்மைப் பணிகளில் வாலிபர் சங்கத்தினர் ஈடுபடஉள்ள னர். தூய்மைப் பணியாளர்களின் உழைப்பை அங்கீகரிப்பதோடு, அவர்களுக்கு உரிய ஊதியம், பாதுகாப்பான பணிச்சூழல் மற்றும் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். குப்பைகளை முறையாகப் பிரித்துச் சேகரிப்பது குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் இந்நிகழ்வில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என வாலிபர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.