விழுப்புரத்தில் வாலிபர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம்
25 May 2026, 2:30 am
<p><strong>விழுப்புரத்தில் வாலிபர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம்</strong></p><p>விழுப்புரம், மே 24- விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்டனக் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. வேலை வாய்ப்பின்றித் தவிக்கும் இளைஞர்களைக் கொச்சைப்படுத்திப் பேசிய தலைமை நீதிபதியைக் கண்டித்தும், ஒன்றிய பாஜக அரசைத் தட்டிக்கேட்காத அவரது செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த இயக்கம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்டச் செய லாளர் சே.அறிவழகன் கண்டன உரை யாற்றி, கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். இதில் மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜீவா னந்தம் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது, பேருந்து நிலையத்திற்கு வந்த 3 வயது சிறுவன் சுகதேவ் ஆர்வத்துடன் வந்து கையெழுத்திட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.</p>
