தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்! மதுரையில் வாலிபர், மாணவர் சங்கத்தினர்

11 Oct 2026, 9:02 pm
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்! மதுரையில் வாலிபர், மாணவர் சங்கத்தினர்
<p><strong>தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்! மதுரையில் வாலிபர், மாணவர் சங்கத்தினர் </strong>ஆர்ப்பாட்டம்மதுரை, அக்.11-வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்(எஸ்.ஐ.ஆர்) மூலம் முறைகேட்டில் ஈடுபட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தியும், தில்லி உட்பட நாடுமுழுவதும் ஜனநாயக உரிமை களுக்காகப் போராடிய மாணவர்கள், இளைஞர்கள் மீதான கைதுநடவடிக்கைகளைக் கண்டித்தும் மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில்ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மதுரை ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஞானேஷ்குமாரின் முகமூடியை அணிந்தஒருவரைக் கயிற்றால் கட்டி அழைத்து வந்து நூதன முறையில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. மேலும்,தமிழகத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிராக, “கோ பேக் மோடி” என முழக்கமிட்டனர். முன்னதாக, யூசி பள்ளி அருகிலிருந்துஊர்வலமாகப் புறப்பட்டு ரயில் நிலையம் வந்தடைந்தனர்.மாணவர் சங்க மாவட்டத் தலைவர் டேவிட் ராஜதுரை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வாலிபர் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.வேல்தேவா, புறநகர் மாவட்டச் செயலாளர் தமிழரசு, மாநகர் மாவட்டத் தலைவர் டி.செல்வா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.</p><p>ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் சுபஸ்ரீ, புறநகர் மாவட்டப் பொருளாளர் திரிதரன்,மாநகர் மாவட்டத் துணைத் தலைவர் பிரசாந்த், செயற்குழு உறுப்பினர் விக்கி, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் டீலன் ஜெஸ்டின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.