தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி வாலிபர், மாணவர் சங்கத்தினர் பேரணி; ஆர்ப்பாட்டம்
10 Oct 2026, 3:09 am

தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி வாலிபர், மாணவர் சங்கத்தினர் பேரணி; ஆர்ப்பாட்டம்

ஈரோடு, அக்.9-தலைமை தேர்தல் ஆணையர்பதவியிலிருந்து ஞானேஷ்குமார்விலக வேண்டும் என வலியுறுத்தி வாலிபர், மாணவர் சங்கத்தினர் பேரணியில் ஈடுபட்டனர்.‘வாக்குரிமை எங்கள் உரிமை,ஜனநாயகம் எங்கள் உரிமை’ என்றமுழக்கத்தை எழுப்பியும், தலைமைதேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய ஜனநாயகவாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தினர் வெள்ளியன்று பேரணியில் ஈடுபட்டனர்.

ஈரோடு ஜவான் பவன் அருகிலிருந்து துவங்கிய பேரணிக்கு, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் த.நவீன் தலைமை வகித்தார். வாலிபர்சங்க மாவட்டச் செயலாளர் வி.ஏ.விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மீனாட்சி சுந்தரனார் சாலையில் சென்ற பேரணி ஈரோடு தலைமை தபால் நிலையம் அருகே நிறைவடைந்து, அங்கு ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. இறுதிவரை பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்து வந்தது. ஆயினும்தடையை மீறி பேரணி நடத்துவதுஎன மாணவர்களும், வாலிபர்களும் திரண்டனர்.

கோவை

கோவையில், காந்திபுரம் அருகே உள்ள மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே இருந்து துவங்கிய பேரணி, வஉசி பூங்கா மைதானம் அருகே நிறைவடைந்தது. இந்நிகழ்விற்கு, மாணவர் சங்கமாநிலச் செயலாளர் தௌ.சம்சீர் அகமது தலைமை வகித்தார். இதில், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர்என்.ராஜா, செயலாளர் தினேஷ்ராஜா, பொருளாளர் அர்ஜுன், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பாவெல், செயலாளர் ஜூல்பிகர் அகமது உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்பின் செய்தியாளர்களிடம் சம்சீர் அகமது பேசுகையில், இந்திய நாடு பெற்ற அரசியல் சுதந்திரத்தை பயன்படுத்தி, பாஜகவின் வெற்றிக்காக தேர்தல் ஆணையம் ‘ஸ்பெஷல் இன்டென்சிவ் ரிவிஷன்’ (SIR) என்ற பெயரில் குறுகியநோக்கத்தோடு செயல்பட்டுள்ளது என்பது அம்பலமாகியுள்ளது. இதன் காரணமாக ஞானேஷ் குமார் தார்மீகப் பொறுப்பேற்று, தனது பதவியை விட்டு விலக வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டதற்கு எதிராகப் போராடும் மாணவர்களை, ரயில்களை மறித்தும் நடுவழியில் இறக்கி அழைத்துச்செல்லும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தில்லியில் சுமார் 57 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அக்.10 ஆம்தேதியன்று காலையில் தில்லியை சென்றடைய வேண்டிய 24க்கும்மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நரேந்திர மோடி அரசுமாணவர்களின் போராட்டத்தை கண்டு அச்சமடைந்துள்ளது. மோடிஅரசு, ஞானேஷ் குமாரை பாதுகாக்கிறது; ஞானேஷ் குமார் பாஜகவை பாதுகாக்கிறார். இந்த கூட்டுக் களவாணித்தனத்தையும், கூட்டுத் திருடர்களையும் தமிழக மற்றும் இந்திய மக்கள் அம்பலப்படுத்தி தோற்கடிபபார்கள், என்றார்.