வாலிபர் சங்க கோரிக்கை எதிரொலி: அரசுப்பள்ளி வளாகம் தூய்மையானது!
5 Jun 2026, 10:02 pm
<p>அவிநாசி, ஜூன் 5- திருமுருகன்பூண்டி அருகே ராக்கியாபாளையம் அரசு உயர் நிலைப்பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யக் கோரி மனு அளித்ததன் எதி ரொலியாக, நகராட்சி நிர்வாகம் உட னடியாக தூய்மைப் பணிகளை மேற் கொண்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், திருமுருகன் பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட ராக்கி யாபாளையத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி யில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரு கின்றனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இப்பள்ளியின் உட்புற மும் வெளிப்புறமும் பெருமளவில் குப்பைகள் தேங்கியும், செடி, கொடி கள் வளர்ந்து புதர்கள் மண்டியும் காணப்பட்டன. இதனால் மாணவர்க ளுக்கும், ஆசிரியர்களுக்கும் தொற்று நோய் பரவும் அபாயமும், உடல்நலப் பாதிப்புகளும் ஏற்படும் சூழல் நிலவி வந்தது. இதனை உடனடியாக சீர மைத்து, பள்ளி வளாகத்தை தூய் மைப்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி, திருமுருகன்பூண்டி நக ராட்சி ஆணையரிடம் இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் அவிநாசி ஒன்றியக் குழுவினர் கோரிக்கை மனு அளித்தனர். இதில், வாலிபர் சங்கத் தின் ஒன்றியத் தலைவர் சந்தோஷ் குமார், செயலாளர் வடிவேல் உள் ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இம்மனுவின் எதிரொலியாக, தூய்மைப் பணியாளர்கள் மூலம் பள்ளி வளாகத்தில் மண்டியிருந்த புதர்கள் அகற்றப்பட்டு, குப்பைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு முழுமையாக சுத்தம் செய்யப்பட் டன. நகராட்சி நிர்வாகத்தின் இந்த அதிவிரைவு நடவடிக்கைக்கு பெற் றோர்களும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.</p>
