முந்தய பக்கம்

வேலையின்மைக்கு எதிராக தேனியில் வாலிபர் சங்கம் பேரணி

24 May 2026, 11:03 pm
வேலையின்மைக்கு எதிராக தேனியில் வாலிபர் சங்கம் பேரணி
<p><strong>வேலையின்மைக்கு எதிராக தேனியில் வாலிபர் சங்கம் பேரணி</strong></p><p>தேனி, மே 24- வேலையின்மை பிரச் சனை மற்றும் அதுகுறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தெரி வித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வாலிபர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவ தும் நடத்தப்பட்ட இளைஞர் பேரணியின் ஒரு பகுதியாக தேனி நகரில் எழுச்சியுடன் பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் விக்னேஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் டி.நாக ராஜ் நிறைவுரையாற்றினார். எம்.நாகராஜ், பி.அறி வானந்தம், ஏ.வெங்கடேஷ், சௌந்தரபாண்டியன் உள் ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பள்ளிவாசல் தெருவில் தொடங்கிய பேரணி, பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. பின்னர் அங்கு ஆர்ப்பாட்டம் நடத் தப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram