தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஊசாம்பாடி நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல வாலிபர் சங்கம் போராட்டம்

19 Aug 2026, 11:58 pm
ஊசாம்பாடி நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல வாலிபர் சங்கம் போராட்டம்

ஊசாம்பாடி நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல வாலிபர் சங்கம் போராட்டம்

திருவண்ணாமலை, ஆக19-திருவண்ணாமலை–வேலூர் சாலையில் உள்ள ஊசாம்பாடி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள், பேருந்துகளை அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர். இங்கு 6 ஆயி ரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.

வேலைக்குச் செல்ல, பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகளுக்கு செல்ல, மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கபோளூர், திருவண்ணா மலை, வேலூர் போன்ற அருகிலுள்ள நகரங்களுக்கு செல்லவும், அரசு அலு வலகங்களுக்கு செல்லவும் பேருந்து வசதி தேவைப்படுகிறது. ஆனால், ஊசாம்பாடி பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்துகள் நிற்காமல் செல்வதால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதனன்று (ஆக. 19) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், ஊசாம்பாடி பேருந்து நிறுத்தத்தில்அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று செல்ல வேண்டுமென வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல்துறை, மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், வாலிபர் சங்க நிர்வாகிகளுடன்பேச்சு வார்த்தை நடத்தி, ஊசாம்பாடி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதாகஉறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.இந்தப் போராட்டத்தில், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சி.எம். பிரகாஷ், சிபிஎம் மாவட்ட செயலாளர் ப.செல்வன், நிர்வாகிகள் எஸ். ராமதாஸ், ச.குமரன், பன்னீர்செல்வம், வாலிபர் சங்க நிர்வாகிகள் செல்வகணபதி,தமிழ்ச்செல்வன், பெரியசாமி, கார்த்திக், அபிமாறன், கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.