முந்தய பக்கம்

உளுந்தூர்பேட்டையில் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

21 Jul 2026, 12:06 am
உளுந்தூர்பேட்டையில் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

உளுந்தூர்பேட்டையில் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நீட் முறைகேட்டை கண்டித்தும் இதற்கு காரணமான ஒன்றிய கல்வி அமைச்சர் ராஜினாமா கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் உளுந்தூர்பேட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் இ.சதீஷ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வாலிபர் சங்க மாநிலத் தலைவர் செல்வராஜ் கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் மு.சிவகுமார்,மாவட்டத் துணைத் தலைவர்கா.சக்கரவர்த்தி,மாவட்ட செயற்குழு மோ.தீபன்ராஜ் உள்ளிட்ட ஏராளமான வாலிபர் சங்க தோழர்கள் கலந்து கொண்டனர்.

நீட் தேர்வு முறைகளை கண்டித்தும், காரணமான ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்யக்கோரி விருத்தாசலத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக சிபிஎம் மற்றும் வெகுஜன அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வு முறைகளை கண்டித்தும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்யக்கோரிதேவனாம்பட்டினம் பெரியார் கலை கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஒன்றிய அமைச்சர் பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Share
FacebookXWhatsAppTelegram