முந்தய பக்கம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலி

16 Jun 2026, 12:14 am
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலி
<p>தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் கள உதவி பணியாளர் பணிக்கு தேர்ச்சி பெற்ற 9 ஆயிரத்து 600 பேரை பணியமர்த்த வேண்டும், பெண்களுக்கான 30 சதவீதம் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று (ஜூன் 15) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜா.பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சங்கத்தின் மாநில பொருளாளர் தீ.சந்துரு, மாவட்டத் தலைவர்கள் வே.அருண்குமார் (மத்தியசென்னை), என்.குமரன் (தென்சென்னை), மத்தியசென்னை மாவட்ட பொருளாளர் லோ.விக்னேஷ், துறைமுகம் பகுதிச் செயலாளர் மகேஷ்வரன் உள்ளிட்டோர் பேசினர்.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram