சாதி ஆணவ கொலை தடுப்புச் சட்டத்தை நிவைவேற்றிடுக
17 Jul 2026, 11:35 pm
<p><strong>சாதி ஆணவ கொலை தடுப்புச் சட்டத்தை நிவைவேற்றிடுக</strong></p><p>திருப்பூர், ஜூலை 17- தமிழ்நாட்டில் சாதி ஆணவ கொலை தடுப்புச் சட்டம் நிறைவேற்றக்கோரி, திருப்பூரில் இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். திருப்பூர் தீரன் சின்ன மலை பேருந்து நிலையம் முன்பாக வெள்ளியன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் வடக்கு மாநகர வாலிபர் சங்க தலைவர் சுபாஷ் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் எஸ் விவேக் தொடக்க உரையாற்றினார். கோரிக்கையை வலியுறுத்தி வடக்கு மாநகரச் செயலாளர் நவீன், மாநகரப் பொருளாளர் ரமேஷ், மாநகரக் குழு உறுப்பினர் தனுஷ் ஈஸ்வர் ஆகியோர் பேசினர். திருப்பூர் மாவட்ட தலைவர் நிரூபன் சக்கரவர்த்தி சிறப்புரை ஆற்றினார். இதில் மாவட்ட செய லாளர் பாலமுரளி உட்பட வாலிபர் சங்க நிர்வாகிகள் ஊழியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். மாநகரத் துணைத் தலை வர் மகேஷ் நன்றி கூறினார்.</p>
