தேனியில் வாலிபர் சங்கம் குடியேறும் போராட்டம் தள்ளுமுள்ளுவால் ஆட்சியரகத்தில் பரபரப்பு
5 Oct 2026, 9:18 pm

தேனியில் வாலிபர் சங்கம் குடியேறும் போராட்டம் தள்ளுமுள்ளுவால் ஆட்சியரகத்தில் பரபரப்பு

தேனி, அக்.5-இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குடியேறும் போராட்டத்தில் போது காவல் துறையினருக்கும் போராட்டக் காரர்களுக்கும் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட 29வது வார்டில் ஐந்து தலைமுறையாக குடியிருந்து வரும் அனைத்து மக்களுக்கும் பட்டா வழங்க வேண்டும். அந் தப் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தின் அங் கன்வாடி சமுதாயக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தலைமையில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.

சுமார் நூற்றுக்கணக் கான வாலிபர் சங்கத்தினர், பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி முழக்கங் கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்தனர். அப்போது அங்கிருந்த போலீசார், அனுமதி மறுத்து ஆட்சியர் அலுவலக நுழைவாயில் பிரதான கதவுகளை அடைத்து தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் போராட் டக்காரர்கள் ஆட்சியர் அலுவலக நுழைவாயில் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தனர். அவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சிலர் கீழே விழுந்தனர். ஒரு சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத் திய போலீசார், நிர்வாகிகள் மட்டும் ஆட்சியரை சந்திப்பதற்கு அழைத்துச் சென்றனர். கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக் கப்பட்டது.

போராட்டத்தில் தேனி வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி.நாகராஜ், மாவட்டத் தலைவர் எஸ்.விக்னேஸ்வரன், தேனி தாலுகா செயலாளர் பி.அறிவானந்தம், தலைவர் எம்.நாகராஜ், துணைத் தலைவர் ஆர்.வெற்றிவேல், தாலுகா நிர்வாகிகள் ஆர்.எஸ்.மணி, எம்.மணிகண்டன் மற்றும் சிபிஎம் தேனி தாலுகா செயலாளர் இ.தர்மர், முன் னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகன் உள் ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண் டனர்.