தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு:தமிழகம் முழுவதும் நவம்பர் 10, 11, 12-ல் வாலிபர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்!

2 Nov 2026, 9:30 pm
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு:தமிழகம் முழுவதும் நவம்பர் 10, 11, 12-ல் வாலிபர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்!

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு:தமிழகம் முழுவதும் நவம்பர் 10, 11, 12-ல் வாலிபர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை, நவ. 2 –அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும், தேசிய சராசரியை விடத் தமிழகத்தில் அதிகமாக உள்ள விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நவம்பர் 10, 11, 12 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் 500 மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்துச் சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வராஜ், மாநிலச் செய லாளர் எஸ். கார்த்திக் ஆகியோர் வெளி

யிட்டுள்ள அறிக்கையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் உழைக்கும் மக்களின் குடும்பப் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். ஒன்றிய அரசின் தரவுகளின்படி, சில்லறை மற்றும் உணவுப் பணவீக்கம் தேசிய சராசரியை விடத் தமிழகத்தில் அதிகமாக உள்ளது. குறிப்பாக அரிசி, துவரம் பருப்பு, வெங்காயம், பாமாயில் போன்ற பொருட்களின் விலை அகில இந்திய சராசரியை விடத் தமிழகத்தில் பல மடங்குகூடுதலாக உள்ளது.பதுக்கல் மற்றும் சந்தை முறைகேடு களைத் தடுத்து, பொதுவிநியோகத் திட்டத்தை வலுப்படுத்தி நியாயமானவிலையில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை ஒன்றிய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.விலைவாசி உயர்வை எதிர்த்து நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்களில் உழைக்கும் மக்கள் பெருந்திரளாகப்பங்கேற்க வேண்டும் என வாலிபர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.