தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரயில்வே துறையில் பணியிடங்கள் ஒழிப்பு - சேலத்தில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

2 May 2026, 2:04 pm
ரயில்வே துறையில் பணியிடங்கள் ஒழிப்பு - சேலத்தில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

இந்திய ரயில்வேயில் ஆட் குறைப்பு செய்யும் ஒன்றிய மோடி அரசின் அராஜகத்தை கண்டித்து சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரயில்வே நிர்வாகத்தின் சுற்றறிக்கை நகல் எரிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய ரயில்வே வாரியம் எல்லா மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் இரண்டு சதவீதத்தை நடப்பு ஆண்டில் ஒழித்துக் கட்டவும் அல்லது மறு விநியோகம் செய்யவும் அறிவுறுத்தி உள்ளது. தென்னக ரயில்வேயில் இதனால் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஒழிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த நிலையில், இந்திய ரயில்வேயின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், ரயில்வே ஊழியர்களின் வேலைப்பளு அதிகரிப்பு, இளைஞர்களுக்கு வழங்க வேண்டிய வேலை வாய்ப்பை ஒன்றிய மோடி அரசாங்கம் சீர்குலைத்து வருவது ஆகியவற்றை கண்டித்தும், ரயில்வே துறையில் காலி பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கதினர் சேலம் மாவட்ட செயலாளர் வி. பெரியசாமி தலைமையில் சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு ரயில்வே நிர்வாகத்தின் சுற்றறிக்கை நகல் எரிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் அரவிந்தசாமி, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் இளவரசன், தர்மபுரி மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி, நாமக்கல் மாவட்ட செயலாளர் சரவணன் உள்ளிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.