எரிபொருட்கள் விலை உயர்வால் மக்கள் கடும் அவதி கவனம் பெற்ற வாலிபர் சங்கத்தின் நூதனப் போராட்டம்
2 Jun 2026, 9:49 pm
<p><strong>எரிபொருட்கள் விலை உயர்வால் மக்கள் கடும் அவதி கவனம் பெற்ற வாலிபர் சங்கத்தின் நூதனப் போராட்டம்</strong></p><p>சேலம், ஜூன் 2- பெட்ரோல், டீசல், சமையல் எரி வாயு விலைகளை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் நடை பெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நூதனப் போராட்டம் பொது மக்களிடையே அதிகளவில் கவனம் பெற்றுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 9 முறைக்கும் அதிகமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. சமையல் எரி வாயு விலை உயர்வின் காரணமாக அன்றாட மக்களின் வாழ்வாதார தேவை கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. மேலும், வர்த்தக சிலிண்டர்களின் விலை உயர்வு கடுமையாக இருப்ப தால், உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளன. எனவே, நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை குறைக்க ஒன்றிய மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சா எண்ணெய் உயரும்போது, எரி பொருட்களின் விலை உயர்த்தப்படு கிறது. கச்சா எண்ணெய் விலை குறையும்போது, எரிபொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் செவ்வா யன்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கோட்டை பாரத ஸ்டேட் வங்கி முன்பு திரண்ட வாலிபர் சங்கத்தி னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழி யாக தலைக்கவசம் அணிந்தவாறு, சாலையில் ரயில் ஓட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் வடக்கு மாநகரத் தலைவர் புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்ற இப்போரா ட்டத்தில், செயலாளர் மனோகரன், முன்னாள் மாவட்டச் செயலாளர் பிரவீன்குமார், நிர்வாகிகள் நாகராஜ் முத்துக்குமரன், ரேவதி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். வாலிபர் சங்கத்தின் இந்த போராட்டம் பொதுமக்களிடையே அதிகளவில் கவனம் பெற்றது.</p>
