தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நகராட்சி - குடிநீர் வழங்கல் துறையில் காலிப்பணியிடங்கள் ரிசர்வ் பட்டியலை வெளியிடக் கோரி வாலிபர் சங்கம் போராட்டம்!

24 Jun 2026, 10:52 pm
நகராட்சி - குடிநீர் வழங்கல் துறையில் காலிப்பணியிடங்கள் ரிசர்வ் பட்டியலை வெளியிடக் கோரி வாலிபர் சங்கம் போராட்டம்!

நகராட்சி - குடிநீர் வழங்கல் துறையில் காலிப்பணியிடங்கள் ரிசர்வ் பட்டியலை வெளியிடக் கோரி வாலிபர் சங்கம் போராட்டம்!

காவல்துறை அராஜகம் - கைது

சென்னை, ஜூன் 24- ரிசர்வ் பட்டியல் வெளியிடக் கோரி போராட்டம் நடத்திய வாலிபர்களை காவல்துறையினர் அராஜகமாக கைது செய்தனர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலிப் பணியிட ங்களை நிரப்ப ஓராண்டுக்கு முன்பு தேர்வு நடைபெற்றது.

இதில், தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 2,566 பேர் அடங்கிய தெரிவுப் பட்டியலை துறை வெளியிட்டது. எஞ்சியவர் களைக் கொண்டு, ரிசர்வ் பட்டியலை துறை வெளியிட வேண்டும்.

தெரிவுப் பட்டியலில் உள்ளவர்கள் பணியில் சேராதபோது ரிசர்வ் பட்டியலில் இருந்து பணிக்கு எடுத்துக் கொள்வார்கள். தெரிவுப்பட்டியலில் இருந்த சுமார் 400 பேர் பணியில் சேரவில்லை. பணியில் சேர்ந்தவர்களில் 400-க்கும் மேற்பட்டோர் பணியிலிருந்து விலகி அல்லது பதவி உயர்வு பெற்று சென்று விட்டனர்.

ரிசர்வ் பட்டியல் வெளியிடாததால் 800-க்கும் மேற் பட்டோர் பணி வாய்ப்பு இன்றி உள்ள னர். இதுதொடர்பான வழக்கை விசா ரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, ரிசர்வ் பட்டியலை உடனடியாக வெளியிட உத்தரவிட்டுள்ளது.

முத லமைச்சரின் கீழ் உள்ள இந்தத் துறை நீதிமன்ற உத்தரவை அமல் படுத்தாமல் உள்ளது. இந்நிலையில், துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். ரிசர்வ் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தி புதனன்று (ஜூன் 24) நகராட்சி நிர்வாக இயக்குநரகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்திற்கு வந்த சங்கத் தின் மாநிலப் பொருளாளர் தீ. சந்துரு உள்ளிட்டோரை காவல்துறை யினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து மாநிலத் துணைச் செயலாளர் அரவிந்தசாமி தலைமை யில் வாலிபர்கள் ஊர்வலமாக வந்து இயக்குநரகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது காவல்துறை யினர் கடும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட னர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட வாலிபர்களை அராஜகமாக கைது செய்தனர். இந்தப் போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலை வர் சி. மிருதுளா, வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகிகள் என்.குமரன் (தென் சென்னை), வே. அருண்குமார் (வட சென்னை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.