தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் சாலையில் டயர்களை உருட்டிச்சென்று வாலிபர் சங்கத்தினர் போராட்டம்

15 May 2026, 11:02 pm
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் சாலையில் டயர்களை உருட்டிச்சென்று  வாலிபர் சங்கத்தினர்  போராட்டம்
<p><strong>பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் சாலையில் டயர்களை உருட்டிச்சென்று வாலிபர் சங்கத்தினர் போராட்டம்</strong></p><p>மதுரை, மே 15- பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி, மக்களை அவதிக்குள்ளாக்கியுள்ள ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மே 15 அன்று மதுரையில் நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்கம் சார்பில் மத்திய சிறைச் சாலைக்கு எதிரில் உள்ள அரசரடி பெட்ரோல் பங்க் அருகே கார் மற்றும் இருசக்கர வாகன டயர்களை உருட்டிச் சென்று நூதன வடிவில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மேலப்பொன்ன கரம் பகுதிக்குழு செயலாளர் சிந்து மோகன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செல்வராஜ், மாவட்டச் செயலாளர் வேல் தேவா, மாவட்டப் பொருளாளர் கௌதம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் விக்கி, மலர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் முனியாண்டி, நந்தகுமார், தீலன் ஜஸ்டின், சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இப்போராட்டம் பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.