முந்தய பக்கம்

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறுக! மதுரையில் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

31 May 2026, 10:06 pm
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறுக! மதுரையில் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
<p><strong>பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறுக! மதுரையில் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>மதுரை, மே 31- பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். விலை உயர்வை உடனடியாகக் கட்டுப்படுத்த வலியுறுத்தி யும், ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்தும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் ஜெய்ஹிந்த்புரம் பகுதி குழு பென்னிகுயிக் கிளை சார்பில் ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் தெருமுனை சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பென்னி குயிக் கிளைத் தலைவர் கணேஷ் குமார் தலைமை வகித்தார். பகுதி தலைவர் செல்வமணி, எஸ்எப்ஐ மாவட்ட துணைத் தலைவர் குரு மற்றும் வாலிபர் சங்கர் மாவட்டப் பொருளாளர் க. கௌதம் பாரதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட துணைத் தலைவர் பிரசாத், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், பகு திச் செயலாளர் புவனேஸ்வ ரன், கிளைச் செயலாளர் அருண்குமார் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram