முந்தய பக்கம்

சாலை சீரமைக்கக் கோரி வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

7 Jun 2026, 11:17 pm
சாலை சீரமைக்கக் கோரி வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
<p><strong>சாலை சீரமைக்கக் கோரி வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>திண்டுக்கல், ஜூன் 7- திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்திற்கு உட்பட்ட வளவிசெட்டிபட்டி பகுதியில், சேதமடைந்த சாலையை சீரமைக்க அல் லது புதிய சாலை அமைக்க வலியுறுத்தி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார் பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. வளவிசெட்டிபட்டியில் இருந்து மலைப்பட்டி செல் லும் சாலை நீண்டகாலமாக குண்டும் குழியுமாக இருந்து வருவதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சாலையை உடனடியாக சீர மைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் எம்.சங்கன் தலை மை வகித்தார். மாவட்டத் தலைவர் ரஞ்சித் சேகு வேரா, ஒன்றியச் செயலா ளர் ரஞ்சித்குமார், ஒன்றியப் பொருளாளர் மணிவண் ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். சாலை வசதியை மேம் படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை யினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத் தப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram