முந்தய பக்கம்

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி வாலிபர் சங்கத்தினர் பிரச்சாரம்

15 Jun 2026, 11:50 pm
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி  வாலிபர் சங்கத்தினர் பிரச்சாரம்

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி வாலிபர் சங்கத்தினர் பிரச்சாரம்

கோவை, ஜூன் 15- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வட சித்தூரில் நீட் தேர்வைக் கண்டித்தும், அதை ரத்து செய்ய வலியுறுத்தியும் பிரச்சார இயக்கத்தில் ஈடு பட்டனர். ஏழை எளிய மாணவர்களின் வாழ்வோடு விளை யாடும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண் டும். முறைகேடுகளுக்குக் காரணமான தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களி டையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கோவை மாவட்டம், வடசித்தூரில் இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் திங்களன்று பிரச்சார இயக் கத்தில் ஈடுபட்டனர். எஸ். கவுரி சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சங்க நிர்வாகிகள் குரு மூர்த்தி, ரமேஷ்கண்ணன், வர்மா ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் மூ.அன்பர சன் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிசாமி, தாலுகா தாலுகா செயலாளர் ப.ஆனந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram