‘நாங்களும் கரப்பான் பூச்சிகள் தான்’ வேலை கேட்டு வாலிபர் சங்கம் ஆவேசம்
25 May 2026, 1:34 am
<p><strong>‘நாங்களும் கரப்பான் பூச்சிகள் தான்’ வேலை கேட்டு வாலிபர் சங்கம் ஆவேசம்</strong></p><p>திருப்பூர், மே 24- உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், வேலை கேட்டும் இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த், இளைஞர்களை கர்ப்பான் பூச்சிக ளுடன் ஒப்பிட்டு பேசிய சர்ச்சைக் குரிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக் கும் வகையில், இளைஞர்கள் காக் ரோஜ் ஜனதா பார்ட்டி (கரப்பான் பூச்சி மக்கள் கட்சி) எனும் சமூக வலைதள பக்கத்தை உருவாக்கி பின்தொடர தொடங்கினர். தற் போது இந்த பக்கத்தை 2 கோடிக் கும் மேற்பட்டோர் பின் தொடர் கின்றனர். இளைஞர்களிடம் உள்ள கோபத்தை வெளிப்படுத்தும் வித மாக காக்ரோஜ் ஜனதா பார்ட்டி பக் கம் பிரபலமாகி வருகிறது. அதனை மையமாக வைத்து ஞாயிறன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், இளைஞர்களை அவ மதிக்கும் கருத்துகளுக்கு எதிராக வும், வேலையின்மையைத்தீர்க்க வும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலையில்லாத இளை ஞர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும். வேலை வாய்ப்பு, திறன் மேம்பாட்டுத் திட் டங்கள் முறையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. திருப்பூர் மாவட்டம், அங் கேரிப்பாளையம் பகுதியில் இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் வடக்கு ஒன்றியக்குழு சார்பில், காக்ரோஜ் ஜனதா பார்ட்டி எனும் பதாகைகளை ஏந்தி வேலை கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் வடக்கு ஒன்றியத் தலை வர் நரேந்திர பிரசாத் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாலமுரளி சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட துணைச்செயலா ளர் பிரவீன்குமார், வடக்கு ஒன்றியச் செயலாளர் சந்தோஷ்குமார், பொருளாளர் பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை கோவையில் காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலை, ஜெயா பேக்கரி அருகிலிருந்து பெரியார் படிப்பகம் வரை பேரணி நடை பெற்றது. இப்பேரணிக்கு வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தினேஷ் ராஜா, பொரு ளாளர் அர்ஜூன், இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பாவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
