தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உச்ச நீதிமன்ற நீதிபதியின் பேச்சுக்கு வாலிபர் சங்கம் கண்டனம்: மே 24-இல் பேரணி

22 May 2026, 9:42 pm
உச்ச நீதிமன்ற நீதிபதியின் பேச்சுக்கு வாலிபர் சங்கம் கண்டனம்: மே 24-இல் பேரணி

உச்ச நீதிமன்ற நீதிபதியின் பேச்சுக்கு வாலிபர் சங்கம் கண்டனம்: மே 24-இல் பேரணி

சென்னை, மே 22 - வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சிகள் மாதிரி என பேசிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த்-க்கு இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது

. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வராஜ், மாநிலச் செயலாளர் எஸ்.கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: வேலையில்லாத இளைஞர்கள், சமூகத்தில் ‘கரப்பான் பூச்சிகள்’ மற்றும் ‘ஒட்டுண்ணிகள்’ போலச் செயல்பட்டு, ஊடகம் மற்றும் சமூக ஆர்வலர்களாக மாறி ஒட்டுமொத்த அமைப்பை யும் தாக்குகிறார்கள் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடுமையான வார்த்தைகளால் பேசியிருப்பது கடும் கண்டனத் திற்குரியது; வேலையில்லாத இளைஞர்களின் மீது தொடுக்கும் பெரும் தாக்குதலாகும்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் Cockroach Janta Party (CJP) ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என இணையத்தில் புதிய இன்ஸ்டாகிராம் பக்க கணக்கை உருவாக்கியது இளைஞர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பாக இந்தியாவில் உள்ள ஆளும் அரசியல் கட்சிகளின் இன்ஸ்டாகிராம் கணக்கை மிஞ்சி CJP எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

சமூக வலைதளங்களில் பரவிய விவாதங் களின்படி, இளைஞர்களை “சமூக ஊடக அடி மைகள், பயனற்ற தலைமுறை, முட்டாள்தன மான டிஜிட்டல் கூட்டம்” என்று பாஜக மதவெறி கூட்டங்களிலிருந்து வந்த விமர்சனங்களுக்கு எதிரான பதிலடியாகவே இந்த இயக்கம் உரு வாகியுள்ளது.

வேலையின்மை பிரச்சனை மற்றும் சமீபத் தில் நீட் வினாத்தாள் கசிந்ததில் ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும் என தொடர்ச்சியாக இணையத்தில் CJP குரல் கொடுத்து வருகிறது. ‘

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்பது வெறும் நகைச்சுவை இணைய பக்கம் மட்டுமல்ல. அது இந்திய இளைஞர்களின் அரசியல் விரக்தி, சமூக கோபம், டிஜிட்டல் தலைமுறை உணர்வு, அதிகார எதிர்ப்பு மனநிலை கொண்ட இணைய வடிவமாக பார்க்கப்பட வேண்டும்.

இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டிய ஒன்றிய அரசே அதன் நீதித் துறை நிர்வாகம் வேலையில்லாத இளைஞர் களைப் பற்றி அவதூறாக பேசுவது எந்த வகையி லும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

இந்திய நாட்டில் அரசு நிர்வாகம் தவறு செய்தால், அதை இணையத்தில் தட்டி கேட்டால் இளைஞர்களை அவதூறாக பேசுவது வன்மையாகக் கண்டிக்க கூடியதாகும்.

ஒன்றிய அரசின் ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பேன் என்ற வாக்குறுதி இன்று நீர்த்துப் போய்விட்டது.

எனவே இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்குவதில் அரசு உரிய கவனம் செலுத்திட வேண்டும்.

அதில் கவனம் செலுத்தா மல் ஒன்றிய அரசு, தற்போது இந்த புதிய அமைப் பின் சமூகவலைதளக் கணக்குகளை முடக்கி யுள்ளது ஜனநாயகத்திற்கு எதிரானது.

அந்த முடக்கம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

இளைஞர்களை அவதூறாக பேசிய நீதிபதி கருத்துக்கு எதிராகவும், ஒன்றிய அரசு வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்தி, உறுதிப்படுத்திட வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் கரப்பான் பூச்சி மாதிரி ஊர்வலங்களை அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மே 24 அன்று நடத்திட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு அறைகூவல் விடுக் கிறது.

இதில் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர் கள் அனைவரும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.