தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பொய் வழக்குப்பதிவு செய்யும் வனத்துறை

24 Sept 2026, 1:45 am
பொய் வழக்குப்பதிவு செய்யும் வனத்துறை
<p><strong>பொய் வழக்குப்பதிவு செய்யும் வனத்துறை</strong></p><p>கூடலூர், செப்.23-மக்கள் நலனை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது பொய் வழக்குப்பதியும் வனத்துறையை கண்டித்துஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர்.</p><p>வனவிலங்கு அச்சுறுத்தலிலிருந்து பொதுமக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். வனத்துறையின் அலட்சியப்போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்கள் தங்களதுபிரச்சனைகளை ஜனநாயக ரீதியில் எடுத்துரைப்பதற்கான உரிமையை பாதுகாக்க வேண்டும். வனத்துறையினருடன் இணைந்து காவல்துறையும் பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏற்கனவே, பதியப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் செவ்வாயன்று பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர்.பந்தலூர் பகுதியில் நடைபெற்ற இயக்கத்திற்கு, சங்கத்தின் ஏரியா செயலாளர் பெரியார் மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் இராசி ரவிகுமார் சிறப்புரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் தினேஷ்ராஜா கண்டன உரையாற்றினார். சிபிஎம் ஏரியா செயலாளர் ரமேஷ் வாழ்த்திப் பேசினார். இதில், மாவட்டப் பொருளாளர் உஸ்மான்,மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜம்ஷித் சதீஷ், ரெஜிதா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, எருமாடு பகுதியில் நடைபெற்ற இயக்கத்தில், கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், ஏரியா செயலாளர் ராஜன், சங்கத்தின்நிர்வாகிகள் தினேஷ் ராஜா, ராசி.ரவிக்குமார், மணிகண்டன், உஸ்மான், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சுதர்சன் மற்றும் வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஹக்கீம், ராகுல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.