முந்தய பக்கம்

சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வாலிபர் சங்கம் மனு

19 Jul 2026, 10:53 pm
சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வாலிபர் சங்கம் மனு
<p><strong>சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வாலிபர் சங்கம் மனு</strong></p><p>ராணிப்பேட்டை, ஜூலை 19 சோளிங்கர் தாலுக்கா, வடக்கு பரவத்தூர் கால னியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை முறையாகப் பராமரித்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கக் கோரி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்த னர். சோளிங்கர் ஒன்றிய குழு உறுப்பினர் ச. சரத்குமார் தலைமையில் அளிக்கப் பட்ட இந்த மனுவின்போது, மாவட்ட ஒருங்கிணைப் பாளர் பிரசாந்த் உடனிருந் தார். சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இத்தொட் டியின் உட்புறச் சுவர்களில் இருந்து பெயிண்ட் மற்றும் சிமெண்ட் துகள்கள் உதிர்ந்து குடிநீரில் கலப்ப தாகவும், அடிப்பகுதியில் கழிவுகள் தேங்கியுள்ள தாகவும் மனுவில் சுட்டிக்காட் டப்பட்டுள்ளது. மேலும், விநியோகிக்கப்படும் தண்ணீர் அதிக உப்புத் தன்மையுடன் இருப்பதால், பொதுமக்களின் உடல் நலத்திற்குப் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ள தாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. எனவே, சம்பந்த ப்பட்ட துறையினர் நேரில் ஆய்வு செய்து தொட்டியைச் சுத்தம் செய்து பழுது பார்க்க வேண்டும் என்றும், மக்களுக்கு சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் கிடைக்கத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram