கேரளத்தில் அரசுத் தடையை மீறி தொடரும் ‘ஹிருதயபூர்வம்’ பல்லாயிரம் பேருக்கு உணவு வழங்கும் டிஒய்எப்ஐ
19 Jul 2026, 9:18 pm

கேரளத்தில் அரசுத் தடையை மீறி தொடரும் ‘ஹிருதயபூர்வம்’ பல்லாயிரம் பேருக்கு உணவு வழங்கும் டிஒய்எப்ஐ

திருவனந்தபுரம் கேரளத்தில் உள்ள அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை களில், நோயாளிகளுடன் இருப் பவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுவதைத் தடை செய்வதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே. முரளீதரன் அறிவித்துள்ளார். அரசின் இந்தத் தடையை மீறி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் (டிஒய்எப்ஐ) ஞாயிற் றுக்கிழமை வழக்கம் போல் உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்து, தங்கள் சேவையைத் தொடர்வதாக அறி வித்துள்ளனர்.

‘ஹிருதயபூர்வம்’ - ஒரு மக்கள் இயக்கம்

மருத்துவமனைகளில் பல நாட்கள் தங்கிச் சிகிச்சை பெறும் ஏழை எளிய நோயா ளிகளுக்கும், அவர்களுடன் இருக்கும் உதவியாளர்களுக்கும் உணவு கிடைப்ப தில் பெரும் சிரமம் நீடித்து வந்தது. இத னைத் தீர்க்கும் நோக்கில், கடந்த 2017 ஜன வரி 1ஆம் தேதி டிஒய்எப்ஐ அமைப்பினர் ‘ஹிருதயபூர்வம்’ (இதயப்பூர்வம்) என்ற பெயரில் உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கினர். இந்தத் திட்டம் கேரளம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, ஒரு மக்கள் இயக்கமாகவே மாறியது. ஒவ் வொரு நாளும் வீடுகளில் தயார் செய்யப் படும் சுமார் 40,000 உணவுப் பொட்டலங் கள் சேகரிக்கப்பட்டு, நோயாளிகளுக்கு விநி யோகம் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில், உணவு கிடைக்காமல் தவித்த மக்களுக்கு இந்தத் திட்டம் மிகப்பெரிய பேருதவியாக இருந்தது. சர்வதேச ஊடகங்கள் வரை இத்திட்டத்தைப் பாராட்டியிருந்தன.

ஏன் இந்தத் தடை?

தற்போது கேரளத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அரசு மருத்துவ மனைகளில் ‘கம்யூனிட்டி கிச்சன்’ (Community Kitchen) எனப்படும் சமை யல் கூடங்களைத் தொடங்க அரசு திட்ட மிட்டுள்ளது. இதைக் காரணம் காட்டி, வெளி யில் இருந்து உணவுப் பொட்டலங்கள் விநி யோகம் செய்யப்படுவதைத் தடை செய்வ தாக சுகாதார அமைச்சர் அறிவித்தார்.

தடையை மீறிய சேவை

அரசின் இந்தத் திடீர் தடைக்குச் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தி யில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந் நிலையில், மக்களின் பசியைப் போக்கும் இந்தச் சேவையை நிறுத்த முடியாது என்று அறிவித்துள்ள டிஒய்எப்.ஐ அமைப்பினர், ஞாயிற்றுக்கிழமை கேரளம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் தடையை மீறி உணவுப் பொட்டலங்களை வழங்கினர்.

இதுகுறித்துப் பேசிய டிஒய்எப்ஐ மாநி லத் தலைவர் வி.கே.சனோஜ்,”இந்தச் சேவை தொடர்ந்து நடைபெறும், எக்கார ணம் கொண்டும் மக்கள் பசிக்குத் தள்ளப் படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,” என்று திட்டவட்டமாகத் தெரி வித்துள்ளார். அரசின் முடிவை எதிர்த்து மக்கள் ஒருபுறம் போராடி வரும் வேளை யில், தடையையும் மீறி மனிதாபிமானத்து டன் டிஒய்எப்ஐ அமைப்பினர் செய்து வரும் இந்தச் சேவை பெரும் வரவேற்பைப் பெற் றுள்ளது.