தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாலிபர் சங்கம் சார்பில் ‘ஜென்-ஸி’ தலைமுறைக்கான கலை, தொழில்நுட்பப் போட்டிகள்

17 Aug 2026, 10:33 pm
வாலிபர் சங்கம் சார்பில் ‘ஜென்-ஸி’ தலைமுறைக்கான கலை, தொழில்நுட்பப் போட்டிகள்

வாலிபர் சங்கம் சார்பில் ‘ஜென்-ஸி’ தலைமுறைக்கான கலை, தொழில்நுட்பப் போட்டிகள்

புதுக்கோட்டை, ஆக.17- வாலிபர் சங்கத்தின் புதுக்கோட்டை மாநகரக் குழு சார்பில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘ஜென்-ஸிதலைமுறைக்கான கலை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகள்’ ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டைநகர்மன்றத்தில் நடைபெற்றன.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஓவியம், ரீல்ஸ் மற்றும் புகைப்படம் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. ஓவியப் போட்டியில் சமூக விழிப்புணர்வு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக விழிப்புணர்வு மற்றும் மனிதநேயம், ரீல்ஸ் போட்டிக்கு ‘இன்றைய சமூகத்தில் இளைஞர்கள் சந்திக்கும் சவால்கள்’, புகைப்படப் போட்டிக்கு ‘நான் பார்க்கும் சமூகம்’ என தலைப்புகள் வழங்கப்பட்டன.

புகைப்படப் போட்டியில் முதல் பரிசை சந்திரசேகரன், இரண்டாம் பரிசை ஜெயசூர்யா, மூன்றாம் பரிசை மணி பாரதி, ரீல்ஸ் போட்டியில் முதல் பரிசை ஆர்த்தி, இரண்டாம் பரிசை ஆரோக்கிய திராவிடன், மூன்றாம் பரிசை ஹரிஷ்மா, 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான ஓவியப்போட்டியில் முதல் பரிசை லித்திகா, இரண்டாம் பரிசை ஹஸ்வந்தன், மூன்றாம் பரிசை தர்ஷன், 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் முதல் பரிசை அஸ்விகா, இரண்டாம் பரிசை வெற்றிச்செல்வன், மூன்றாம் பரிசை சுவாதிகா, 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் பரிசை யஸ்மிதா, இரண்டாம் பரிசை அன்சிகா ஷாம்லி, மூன்றாம் பரிசை வர்ஷா, கல்லூரி மாணவர்களில் முதல் பரிசை சுபஸ்ரீ, இரண்டாம் பரிசை சுதி ஆகியோர் வென்றனர்.

பரிசளிப்பு விழாவிற்கு வாலிபர் சங்கத்தின் மாநகரத் தலைவர் வி.கார்த்திகாதேவி தலைமை வகித்தார். நிகழ்வின் நோக்கத்தை விளக்கி மாநகரச் செயலாளர் ஆர்.தீபக் பேசினார். புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.டி. பாலகிருஷ்ணன், வாலிபர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் அருளரசன், மருத்துவர் பி.தனசேகரன் ஆகியோர், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்திப் பேசினர்.நகரக்குழு உறுப்பினர் ராக்குமார் வரவேற்க, நகரப் பொருளாளர் இதயமுரளி நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.