வாலிபர் சங்கம் சார்பில் மாலை நேர இலவச வகுப்பு துவக்கம்
19 Jun 2026, 12:22 am

வாலிபர் சங்கம் சார்பில் மாலை நேர இலவச வகுப்பு துவக்கம்

திருப்பூர், ஜூன் 18 - திருப்பூர் ஓடக்காடு பகுதியில் தோழர் கே.தங்க வேல் நினைவகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மாலை நேர வகுப்பு துவக்கப்பட் டுள்ளது.

இந்த இலவச வகுப்பு துவக்க நிகழ்ச்சி கடந்த திங்களன்று மாலை நடைபெற்றது. வாலிபர் சங்க கொடியை இப்பகுதி மூத்த தோழர் டி.கே.துரைசாமி ஏற்றி வைத்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் முன்னாள் கிளை தலைவர் எம்.தியாகராஜன் தலைமை ஏற்றார். வாலிபர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் க.நிருபன் சக்கரவர்த்தி துவக்க உரையாற்றினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், வாலிபர் சங்க வடக்கு மாநகரச் செயலாளர் நவீன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். முதல் நாள் வகுப்பில் இந்த பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.

தினமும் மாலை 6:00 மணி முதல் 7.30 மணி வரை வகுப்பு நடைபெறும் என்று கிளை நிர்வாகிகள் தெரி வித்தனர். வகுப்பு துவக்கப்பட்ட இரண்டு நாட்க ளில் 40 மாணவர்கள் மாலை நேர வகுப்பில் பங்கேற்ற னர்.