தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இளைஞர்களின் வாழ்வாதாரத்தை சீரழித்த மோடி அரசு! வாலிபர் சங்க அமைப்பு தின பொதுக் கூட்டத்தில் எஸ்.கார்த்திக் பேச்சு

3 Nov 2026, 11:54 pm
இளைஞர்களின் வாழ்வாதாரத்தை சீரழித்த மோடி அரசு! வாலிபர் சங்க அமைப்பு தின பொதுக் கூட்டத்தில் எஸ்.கார்த்திக் பேச்சு

இளைஞர்களின் வாழ்வாதாரத்தை சீரழித்த மோடி அரசு! வாலிபர் சங்க அமைப்பு தின பொதுக் கூட்டத்தில் எஸ்.கார்த்திக் பேச்சு

அருமனை, நவ.2 -படித்த இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறித்து வாழ்வாதாரத்தை மோடி அரசு சீரழித்துள்ளது. உரிமைகளைக் கேட்டு போராடினால் போலீசை ஏவி விட்டு தாக்குதல் நடத்துகிறது என வாலிபர் சங்க அமைப்பு தின பொதுக் கூட்டத்தில் மாநிலச் செயலாளர் எஸ்.கார்த்திக் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டம் கழுவன்திட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 46 ஆவது அமைப்பு தினப் பொதுக் கூட்டம் நவ.1 ஞாயிறன்று சங்கத்தின் மாவட்டக் குழு சார்பில் நடைபெற்றது. ‘எல்லோருக்கும் கல்வி எல்லோருக்கும் வேலை’ என்பதை அடிப்படை நோக்கமாக கொண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் 1980 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் துவக்கப்பட்டது.

இந்தியாவின் ஜனநாயக செயல்பாட்டுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய அவசர நிலை காலத்தில் துவங்கி, தற்போது நாட்டின் மிகப்பெரிய இளைஞர் அமைப்பாக திகழ்கிறது. இச்சங்கத்தின் அமைப்பு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டக் குழு சார்பில் கழுவன்திட்டையில் நடந்த பொதுக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ரெதிஷ் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் எஸ்.கார்த்திக், மாவட்டச் செயலாளர் விஷ்ணு, மாவட்டப் பொருளாளர் விபின், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜினு ஜினால்டு, மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆர். செல்லசுவாமி, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் அனந்தசேகர் ஆகியோர் பேசினர்.

மாநிலச் செயலாளர் எஸ்.கார்த்திக் பேசுகையில், “இந்திய நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாலிபர் சங்கம் செய்து வரும் பணிகள் எந்த அமைப்புகளாலும் ஈடு கொடுக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. பாஜக அரசானது இந்திய நாட்டின் பொதுத் துறைகளையும் தனியாருக்கு விற்பனை செய்து, படித்த இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறித்து இளைஞர்களின் வாழ்வாதாரத்தை சீரழித்துள்ளது. உரிமைகளைக் கேட்டு போராடினால் காவல்துறையை ஏவி விட்டு தாக்குதல் நடத்துகிறது.

போராடிப் பெற்ற உரிமைகளை பறிக்கிற பாஜக அரசு தற்போது இளைஞர்களின் வாழ்வாதாரத்தையும் பறித்து ஓட்டு திருட்டும் நடத்தியுள்ளது. இதற்காக ஏற்பாடு செய்த ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி தில்லியில் மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், இடதுசாரி அமைப்புகள் மற்றும் இந்திய அணிசேர் கட்சிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. போராட்டத்தில் வாலிபர் சங்கத்தின் பங்கு மகத்தானதாகும். தற்போது நாடெங்கும் வாலிபர் சங்கம் இதற்கான போராட்டத்தை நடத்தி வருகிறது என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.