அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய வாலிபர் சங்கத்தினர்
4 Jun 2026, 10:45 pm

கோவை, ஜூன் 4-

கோடை விடுமுறைக்கு பிறகு வியாழனன்று பள்ளிகள் திறந்ததையடுத்து, கோவையில் பல்வேறு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வரவேற்றனர்.

கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் பாரதி இன்டீரியர்ஸ் இணைந்து கடந்த நான்கு ஆண்டுகளாக மலைவாழ் கிராமங்கள் மற்றும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி திறப்பு நாளை முன்னிட்டு கல்வி உபகரணங்களை வழங்கி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, 2026–2027 கல்வியாண்டின் முதல் நாளான வியாழனன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு, மாணவர்களை உற்சாகத்துடன் வரவேற்கும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. கல்வி அனைவருக்கும் என்ற அடிப்படைக் கொள்கையை முன்னிறுத்தி, அரசு பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டன.

சூலூர் தாலுகா, வஞ்சிபுரம் கிளை சார்பில் நடுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. கிளைச் செயலாளர் சதீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வாலிபர் சங்க முன்னாள் தாலுகா துணைச்செயலாளர் ஆனந்தன், பொருளாளர் ஜி.உதயபாரதி, கிளை துணைச் செயலாளர் ஜி.ஹரிஹரன், கிளை நிர்வாகிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இருகூர் அரசு ஆரம்பப்பள்ளி - தெற்கு, வடக்கு பள்ளிகளில் பயிலும் சுமார் 170 மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. கிளைச் செயலாளர் டி.வி.பிரவீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தாலுகா செயலாளர் எஸ்.குருசாரதி, முன்னாள் மாவட்ட நிர்வாகி பி.நந்தகுமார், 3 ஆவது வார்டு கவுன்சிலர் ஏ.ராஜேஸ்வரி உள்ளிட்டோர் மாணவர்களை வரவேற்றனர்.

பீளமேடு நகரக்குழு சார்பில் ஆவரம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்களுக்கு, மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் கண்ணகி ஜோதிபாசு ஆகியோர் கல்வி உபகரணங்களை வழங்கினர். இதில், வாலிபர் சங்க மாவட்டச்

செயலாளர் தினேஷ் ராஜா, நகரச் செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சர்க்கார் சாமக்குளம் மேற்கு ஒன்றியக் குழு சார்பில் கீரநத்தம் புதுப்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களை இனிப்பு வழங்கி வரவேற்று, கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் மனோஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்டத் தலைவர் ராஜா, கீரணத்தம் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் கோபால், ஒன்றியச் செயலாளர் முத்து முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து வாலிபர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், கல்வி உபகரணங்கள் வழங்கும் இந்த சிறப்பான நிகழ்வு பள்ளி திறப்பு நாளில் மட்டும் நிறைவடையாமல், கோவை மாவட்டத்தின் பல்வேறு மலைவாழ் கிராமங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ளது. கல்விக்கான பொருளாதார சுமையை குறைப்பதோடு, பள்ளி மாணவர்களின் வருகையையும் கல்வி மீதான ஆர்வத்தையும் அதிகரிப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும். மேலும், கோவை மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகள் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. கல்வி அனைவருக்கும் சமமான உரிமை என்ற அடிப்படையில், அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும், சமூகப் பொறுப்புணர்வுடன் கல்வி சார்ந்த நலத்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கவும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உறுதியுடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தனர்.