அவுட்சோர்சிங் அரசாணை எண் 225-ஐத் திரும்பப் பெற வாலிபர் சங்கம் வலியுறுத்தல்!
30 Oct 2026, 10:34 pm

அவுட்சோர்சிங் அரசாணை எண் 225-ஐத் திரும்பப் பெற வாலிபர் சங்கம் வலியுறுத்தல்!

சென்னை, அக். 30 –அரசுத் துறைகளில் மனிதவளத்தை அவுட்சோர்சிங் முறையில் பெற வகை செய்யும் அரசாணை எண் 225-ஐத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்துச் சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வராஜ், மாநிலச் செயலாளர் எஸ். கார்த்திக் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) மூலம் அரசுத் துறைகளுக்கு அவுட்சோர்சிங் முறையில் மனிதவளம் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது மிகுந்த கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். இத்தகைய நடவடிக்கை சமூகநீதி, இடஒதுக்கீடு மற்றும் தொழிலாளர் உரிமைகளைப் பலவீனப்படுத்தும் ஆபத்தான கொள்கை மாற்றமாகும் என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அரசுப் பணியிடங்களில் டிஎன்பிஎஸ்சி மூலம் பின்பற்றப்படும் வெளிப்படையான இடஒதுக்கீட்டு முறை அவுட்சோர்சிங் முறையில் உறுதிப்படுத்தப்படுவதில்லை என்பதால் ஓபிசி, எஸ்சி, எஸ்டி சமூகங்களுக்கான சட்டப்பூர்வ பிரதிநிதித்துவம் கேள்விக்குறியாகும். மேலும், தனியார் முகமைகள் மூலம் பணியமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம், பணிப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு கிடைக்காது என்றும், ஒரே பணியைச் செய்யும் தொழிலாளர்களிடையே கடுமையான ஊதிய வேறுபாடுகள் உருவாகும் என்றும் தெரிவித்தனர்.

எனவே, அவுட்சோர்சிங் நடைமுறையை முழுமையாகக் கைவிட்டு, அரசுத் துறைகளில் காலியாக உள்ள நிரந்தரப் பணியிடங்களை உரிய தேர்வாணையங்கள் மூலம் உடனடியாகநிரப்ப வேண்டும் என வாலிபர் சங்க மாநிலக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.