கோவை மாவட்டம், சூலூர் தாலுகா பகுதியில் பள்ளிப்
15 Jun 2026, 11:51 pm
<p>கோவை மாவட்டம், சூலூர் தாலுகா பகுதியில் பள்ளிப் படிப்பை முடிக்கும் ஏழை, எளிய மாணவர்களின் உயர் கல்வி நலன் கருதி, புதிதாக அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரி ஒன்றை அமைத்துத் தர வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திங்களன்று சூலூர் சட்ட மன்ற உறுப்பினர் என்.எம்.சுகுமாரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். இந்நிகழ்வில், சங்க மாவட்டச் செயலாளர் தினேஷ் ராஜா, தாலுகா தலைவர் ஏ. பிரவீன் குமார், செயலாளர் எஸ்.குரு சாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p><p><br></p>
